பவுலிங் பண்ணாமல் 104 ரன் கொடுத்த ஜோ ரூட்.. கேப்டன் ரோகித் சர்மா கிரேட் இன்னிங்ஸ்.. விறுவிறுப்பான ராஜ்கோட்

0
257
Rohit

தற்பொழுது இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

இந்தத் தொடரில் இன்று குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி ஜெய்ஸ்வால் பில் மற்றும் ரஜத் பட்டிதார் என இளம் பேட்ஸ்மேன்களை 33 ரன்களில் இழந்துவிட்டது.

இந்திய அணி மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்த பொழுது, ஐந்தாவது விக்கட்டுக்கு ஆச்சரியப்படுத்தும் விதமாக ரவீந்திர ஜடேஜா அனுப்பப்பட்டார். ராகுல் டிராவிட்டின் இந்த முடிவு சிறப்பான ஒன்றாக அமைந்தது.

மிகவும் சிறப்பாக இந்த ஜோடி விளையாடி அரை சதங்களை கடந்தது. இதற்கடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது சர்வதேச 11ஆவது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை அடித்தார்.

- Advertisement -

இதற்கு முன்பாக அவர் 27 ரன்களில் இருந்த பொழுது டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் ஸ்லீப்பில் ஒரு எளிமையான கேட்ச்சை கொடுக்க, அதை ஜோ ரூட் தவறவிட்டார். அப்பொழுது அவர் அந்த கேட்ச்சை பிடித்திருந்தால், இந்திய அணி 47 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கும். மேற்கொண்டு அறிமுக போட்டியில் விளையாடும் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் அடுத்தடுத்து வர வேண்டியதாக இருந்திருக்கும்.

இந்த நிலையில் மேற்கொண்டு விளையாடிய ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்து, ரவீந்திர ஜடேஜா உடன் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இறுதியாக மார்க் வுட் பந்து வீட்டில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : ஹை பிரஷர்சதம்.. WTC ரோகித் சர்மா வெயிட்டான சாதனை.. ஜோரூட்டை கீழே இறக்கினார்

கேட்ச் விடப்பட்ட இடத்தில் இருந்து 101 ரன்கள் ரோஹித் சர்மா குவித்திருக்கிறார். இன்றைய போட்டியில் பந்து வீசாமல் கேட்ச் விட்டு 101 ரன்களை ஜோ ரூட் கொடுத்திருக்கிறார்.