5வது டி20யில் காயம் அடைந்த சாம்சன்.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகலா?. பிசிசிஐ கூறிய முக்கிய தகவல்

0
290

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வலது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்து வெளியேறினார்.

இந்த சூழ்நிலையில் அவரது காயம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இது அவர் ஐபிஎல் தொடரை விளையாட முடியுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

- Advertisement -

காயம் அடைந்த சஞ்சு சாம்சன்

இந்திய டி20 அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக விளங்கி வரும் சஞ்சு சாம்சன் இந்தத் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியின் போது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் வலது கையின் ஆள்காட்டி விரலில் காயம் அடைந்தார். 16 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில் இந்திய அணி பீல்டிங் செய்த போது அவர் விக்கெட் கீப்பிங் பணிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் ஜூரேல் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.

இந்த சூழ்நிலையில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வலது கையின் ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே உடனடியாக சஞ்சு சாம்சன் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று இருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு முடிந்த பிறகு தான் என்சிஏவில் இருந்து அவர் உடல் தகுதிக்கான சான்றிதழை பெற முடியும்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பா?

இதனால் சஞ்சு சாம்சன் சுமார் ஒரு மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதனால் அவர் பிப்ரவரி 8 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி தொடரில் கேரளா அணிக்காக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சுமார் அவர் ஐந்து முதல் ஆறு வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க:இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது.? வெளிவந்துள்ள முக்கிய தகவல்

இதுகுறித்து பிசிசிஐ கூறும் போது “சாம்சனின் வலது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவர் மீண்டும் வலை பயிற்சியை தொடங்க ஐந்து முதல் ஆறு வார காலம் எடுக்கும். எனவே அவர் பிப்ரவரி 8ம் தேதி முதல் நடைபெற உள்ள ரஞ்சி டிராபி கால் இறுதிப் போட்டியில் கேரளா அணிக்காக விளையாட வாய்ப்பில்லை. இருப்பினும் அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்குவார்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே சாம்சன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -