சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த முக்கிய தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாட மறுத்தது. பின்னர் இரண்டு நாடுகளின் ஒப்புதலோடு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தையும் துபாயில் நடத்த வலியுறுத்த அதை பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் ஒப்புக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. வருகிற 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்த இரண்டு நாடுகளும் மோதும் போட்டி என்றால் இரண்டு நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வம் மற்றும் உற்சாகம் மேலோங்கி இருக்கும். மைதானத்தில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிவதை காணலாம். மேலும் இதற்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே இதனை பெருமளவில் தவிர்க்க இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
டிக்கெட்டுகளை எப்படி பெறுவது
ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் இதற்கான பாஸ்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான டிக்கெட் விற்பனை 3000 ரூபாயில் இருந்து தோராயமாக தொடங்குகிறது. எனவே ஐசிசி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் நிகழ்வாக இந்திய அணி இந்த முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் முனைப்பில் இருக்கிறது.
இதையும் படிங்க:ரோஹித்தை அப்பவே விமர்சனம் செஞ்சாங்க.. ஆனா இந்த விஷயத்தை சொன்னது நான்தான் – இங்கி கெவின் பீட்டர்சன்
ஆசிய கோப்பை 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு துபாயில் இந்த இரண்டு அணிகளும் மோதும் சர்வதேச போட்டி இதுவாகும். இது டி20 வடிவில் விளையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மெகா நிகழ்வின்போது இரண்டு முறை மோதியுள்ள நிலையில் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒரு நாள் போட்டி 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்றது. இதில் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.






