சிவம் துபே 16 டு 20 ஓவர் என்ன பண்ணி இருக்கார்?.. ஹர்திக் பாண்டியாதான் கட்டாயம் வேணும் – அம்பதி ராயுடு பேச்சு

0
88
Ambati

இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்காலகட்டத்தில் மாற்றுவீரர் இல்லாத அளவுக்கு மிக முக்கியமான வீரராக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இப்படியான நிலையில் அவருடைய சமீப ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.

கடந்த வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, முன்னணி வீரர்கள் பலரும் அந்த உலகக் கோப்பையை முன்வைத்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்கள். இப்படியான சமயத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் புது டி20 கிரிக்கெட் அணியை உருவாக்க சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தது.

- Advertisement -

இந்த வகையில் தொடர்ச்சியாக சிவம் துபே சில தொடர்களில் இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அவர் மிதவேகப்பந்துவீச்சாளர் என்பதால், அவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஹர்திக் பாண்டியா மாதிரியான வீரருக்கு மாற்று வீரராக உருவாக்க முயற்சிகள் செய்து வந்தது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சிவம் துபே ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே நான்கு அல்லது ஐந்தாம் இடங்களில் விளையாடி, சுழல் பந்துவீச்சாளர்களை தாக்கும் ஒரு சிறப்பு பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். சிஎஸ்கே அணியில் அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும் பொழுது “சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய டி20 அணியில் ஒரே இடத்துக்கு போட்டியிடவில்லை. சிவம் துபே நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வரக்கூடியவர். மேலும் அவர் மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்களை அடித்து விளையாடி ஆட்டத்தை மாற்றும் ஒரு கேம் சேஞ்சர் ரோலில் இருப்பவர்.

இதையும் படிங்க : டி20 உ.கோ இந்திய அணியில் வைல்ட் கார்டில் தோனி.. அகர்கர் மறுக்க முடியாது – இந்திய முன்னாள் வீரர்கள் பேச்சு

அதே சமயத்தில் சிவம் துபே 16 முதல் 20 ஓவர்களில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. மேலும் அந்தக் குறிப்பிட்ட ஓவர்களில் சிவம் துபாயவுக்கு பெரிய ஸ்ட்ரைக் ரேட் இல்லை. அந்த இடத்தில் வந்து பினிஷர்களாக விளையாடுவதற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே இந்த இடங்களுக்கு இவர்கள் தேவை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -