உலகக்கோப்பை இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயமாக விளையாட வேண்டும்” – முன்னாள் மும்பை வீரர் பேட்டி!

0
375

இந்தியன் பிரிமியர் லீக்கின் 16வது சீசனில் 23 வது போட்டி நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சென்ற ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கும் இடையே குஜராத் அகமதாபாத்தில் வைத்து நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தத் தொடர் முழுவதும் குஜராத் அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்து வந்த சாகா விரைவாக வெளியேற அவரைத் தொடர்ந்து சாய் சுதர்சன் குறைந்தபட்ச ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். டேவிட் மில்லர் சுப்மன் கில் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 177 ரன்களை எட்டியது குஜராத் அணி அந்த அணியின் கில் 45 ரன்கள் மில்லர் 40 எண்களும் அபினவ் மனோகர் 13 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இருக்கிறது ராஜஸ்தான் அணி. அந்த அணிக்கு துவக்கமே சரிவாக அமைந்தது பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க ஆரம்பத்திலேயே தடுமாறியது ராஜஸ்தான் அணி. ஆனால் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அதிரடியின் மூலம் ஆட்டம் கைநழுவி போய் விடாதவாறு பார்த்துக் கொண்டார். பின்னர் அவருடன் இணைந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹெட் மேயர் இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மிகச் சிறப்பாக ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் ஆறு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் நின்று சிறப்பாக ஆடி போட்டியை முடித்துக் கொடுத்த ஹெட்மேயர் 26 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றியின் முக்கிய காரணமாக இருந்தார். இதில் 5 பௌண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ரஞ்சி கிரிக்கெட் ஜாம்பவான் அமோல் மஜ்ம்தார் “ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான அத்தியாவசியத்தையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார் . மேலும் ஒரு சில போட்டிகளில் அவரது ஆட்டத்தை கண்டு விட்டு அந்தப் போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை என்றால் உடனடியாக அணியிலிருந்து நீக்கிவிட வேண்டாம்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் “சஞ்சு விற்கே தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நீங்கள் அவரை அடையாளப்படுத்தி போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அந்த வாய்ப்புகளில் அவர் ஒரு சில ஆட்டங்களில் தவறலாம். ஆனால் அவரது திறமை என்ன என்று நமக்குத் தெரியும். நிச்சயமாக என்னுடைய அணியில் எப்போதும் அவருக்கு இடம் உண்டு என தெரிவித்தார் அமோல் மஜும்தார்.