இன்று விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக கேரள அணிக்காக சஞ்சு சாம்சன் துவக்க வீரராக இறங்கி சதம் அடித்து அணியை வெல்ல வைத்திருக்கிறார்.
தற்போது இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் இன்று ஜார்கண்ட் மற்றும் கேரளா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாட வந்த ஜார்கண்ட் அணிக்கு மேல் வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐந்தாவது இடத்தில் விளையாடும் கேப்டன் இஷான் கிஷான் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். கீழ் வரிசையில் வந்த அணுகுல் ராய் 72 பந்தில் 72 ரன்கள் எடுத்தார்.
அதே சமயத்தில் நான்காவது இடத்தில் களம் இறங்கிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் குஸ்கரா சிறப்பாக விளையாடி 137 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஜார்க்கண்ட் அணி 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய கேரளா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் 95 பந்துகளில் 101 ரன்கள், ரோகன் குன்னும்மள் அதிரடியாக 78 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார்கள். இவர்கள் முதல் விஷயத்துக்கு 212 பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த ஜோடியின் அதிரடி காரணமாக கேரள அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் 42 ஓவர்களில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: நியூசி ODI தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. சதம் அடித்த வீரர் நீக்கம்.. திரும்பி வந்த 2 வீரர்கள் – முழு தகவல்கள்
தற்போது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு சஞ்சு samsung துவக்க வீரராக களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது துவக்க இடத்தில் சதம் அடித்து தன்னுடைய பார்மை நிரூபித்து இருக்கிறார். இது இந்திய அணிக்கு நல்ல அறிகுறியாக இருக்கிறது.