இந்திய கிரிக்கெட்

நான் இந்த மாற்றங்களை செஞ்சுதான் ரன் அடிக்க ஆரம்பிச்சேன்.. இன்னொரு உண்மையையும் சொல்றேன் – சஞ்சு சாம்சன் தகவல்

சஞ்சு சாம்சன் நடப்பு உலக கோப்பையில் அடுத்தடுத்து இரண்டு ஆட்டநாயகன் விருதுகள் வாங்கி அசத்தியுள்ளார். தன்னுடைய பேட்டிங் திடீரென சிறப்பாக மாறியதற்கான காரணங்கள் குறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் வாழ்வா சாவா ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மிகப்பெரிய அரை சதங்கள் அடித்து இந்திய அணியில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

இது கடினமான வடிவம்

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் மீண்டும் திரும்பி வரும் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நான் இப்போது நாட்டுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறேனோ, இப்படியான பங்களிப்பை கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவ விரும்பினேன். இந்திய அணிக்கு போட்டிகளை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன்”

“ஆனால் நியூசிலாந்து தொடரில் என்னை நிரூபித்து இந்திய அணியில் தொடர வேண்டும் என்பதற்கு அதிக முயற்சிகள் செய்து விட்டேன். எனவே அதை திருத்திக் கொண்டு நான் இந்த போட்டியை மதித்து அடிப்படைக்குத் திரும்பி சில வேலைகள் செய்தேன். மேலும் இது சிறந்த வீரர்களுக்கு சில நேரங்களில் கடினமான வடிவம். ரன்கள் எடுப்பது சிரமமான விஷயமாக இருக்கும்”

- Advertisement -

நான் இங்கு இல்லை

“கடினமான நேரங்களில் நான் நேசிக்கும் மனிதர்கள், என்னை ஆதரிக்கும் மனிதர்கள் அனைவரும் என்னுடன் இருந்தார்கள். எல்லா ஜன்னல்களையும் மூடிவிட்டேன். என் மொபைலை கூட அணைத்து வைத்து விட்டேன். நான் தற்போது வரை கூட சமூக வலைதளங்களில் இல்லை”

இதையும் படிங்க : இதயம் 160-170 வரை துடித்தது.. ஹாரி புரூக் கிட்ட ஓப்பனா கேட்டேன்.. சாம்சன் புரிஞ்சுகிட்டார் – சூரியகுமார் யாதவ் பேச்சு

“இதன் காரணமாக வெளிப்புற சத்தம் குறைந்தது. என்னை தொடர்பு கொள்ளும் மக்களும் குறைந்தார்கள். இது எனக்கு சரியான திசையில் கவனம் செலுத்த உதவியது. நான் இப்போது எப்படி முன்னேறி இருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by