வாய்ப்பு மறுப்பு பிசிசிஐ தான் காரணமா.?.. மௌனம் கலைத்த சஞ்சு சாம்சன்.. ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு கிடைத்த பதில்.!

0
609

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் அபார சதம் அடித்தார். அவருக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படாததை அடுத்து ரசிகர்கள் பிசிசிஐ யின் மீது கோபத்தில் உள்ளனர். எனவே தனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்தும், பிசிசிஐ யின் மீது தனக்கு ஏற்பட்ட அதிருப்தி குறித்தும் மறைமுகமாக சில கருத்துக்களைப் பகிர்ந்து உள்ளார் சஞ்சு சாம்சன்.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமனில் முடிந்ததை அடுத்து, இரு அணிகளுக்கிடையே என ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் தனக்குக் கிடைத்த வாய்ப்பினை இந்த முறை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவர் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி 114 பந்துகளில் 108 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிபெற முக்கியக் காரணமாக அமைந்தார்.

இவர் திலக் வர்மாவுடன் இணைந்து அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து அப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். சற்று கடினமான இலக்கை எதிர்கொண்ட தென்னாபிரிக்க அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்திய அணிக்குப் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஸ்தீப் சிங் தொடர் நாயகன் விருதை வென்றார். தனது சர்வதேச முதல் ஒருநாள் சதத்திற்கான நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெற்றிக்குப் பிறகு இதுவரை தனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து விரிவாகப் பேசி இருக்கிறார் சஞ்சு சாம்சன். இவர் எம்எஸ் தோனிக்குப் பிறகு இந்தியாவின் புதிய வரவாக பார்க்கப்பட்டவர், தனது சீரற்ற பங்களிப்பினால் இந்திய அணியால் இவருக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்க முடியவில்லை.

- Advertisement -

இது குறித்து பேசிய சஞ்சு சாம்சன்,
” ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக இருந்த போதிலும் அனைத்து ஊடக அழுத்தங்களுடனும், களத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களுடனும் உங்கள் மனதை நிஜத்தில் வைத்திருப்பது மிகவும் சவாலானது. என் கட்டுப்பாட்டில் உள்ளவற்றின் மீது மட்டுமே நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். மக்களின் எண்ணங்கள் வித்தியாசமாக இருக்கலாம்.

ஆனால் நம் தேர்வுகள் மட்டுமே நீங்கள் எதை மேம்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யும். எனக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், எனது தோல்விகள் மற்றும் நான் தவறவிட்ட வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் அதற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. நான் எப்போதும் நம்மை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன். விஜய் அசாரே டிராபியில் நான் கேரள அணியுடன் மிகவும் கடினமாக உழைத்தேன். நமக்குள்ளே சில கட்டுப்பாடுகளை விதித்து அதற்குத் தகுந்தவாறு உழைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.