சாம்சனுக்கு 10 போட்டியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள்.. ரவி சாஸ்திரி கோரிக்கை

0
325

இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து பத்து போட்டியில் வாய்ப்பு கொடுக்கும்படி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தாலும் வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ரவி சாஸ்திரி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் இந்திய கிரிக்கெட் அணி இனி இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்னைக் கேட்டால் சஞ்சு சம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள். அவரைத் தொடர்ந்து பத்து போட்டியில் விளையாட வையுங்கள். மற்றவர்களுக்காக சஞ்சு சம்சனை அணியிலிருந்து நீக்காதீர்கள். தொடர்ந்து வாய்ப்பு அளித்த பிறகு அவர் எப்படி செயல்படுகிறார் என்பது குறித்து முடிவு எடுங்கள் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

இதனிடையே இளம் வீரர்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்திய அணி நிர்வாகத்திற்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் நியூசிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மூன்றாவது இடத்திலும் சூரியகுமார் யாதவ்க்கு நான்காவது இடத்திலும் வாய்ப்பு கிடைக்கும்.

அப்படி இருக்க சாம்சனுக்கு எந்த இடத்தில் வாய்ப்பு வழங்குவீர்கள் தொடக்க வீரராக சுப்மான் கில், ரிஷப் பண்ட் அல்லது இஷான் கிஷன் ஆகியோர் இருக்கிறார்கள். இதனால் சஞ்சு சாம்சன் பினிஷர் ஆக விளையாடுவாரா? இல்லை நடு வரிசையில் விளையாடுவாரா ? இல்லை சஞ்சு சம்சனுக்கு பிளேயிங் லெவன் முதலில் இடம் கிடைக்குமா என்று அஸ்வின் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பியுள்ளார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடர்க்கு முன்பு தென்னாப்பிரிக்கா தொடரில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார் .எனினும் அவருக்கு பி சி சி ஐ டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கவில்லை. முதலில் இரண்டாவது டி20 போட்டியில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தற்போது டாஸ் வென்ற நியூஸிலாந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது