“நான் இதை சூஸ் பண்றேன்” – ஆஸி ODI தொடர் புறக்கணிப்புக்கு பின் மௌனம் கலைத்த சஞ்சு சாம்சன்!

0
3060
Samson

தற்பொழுது இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் உலகக் கோப்பை முன்பாக இந்தியாவில் விளையாட இருக்கிறது.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்து விளையாட இருக்கிறது என்பதால், இந்தத் தொடருக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் துருப்புச்சீட்டுகளாக இருக்கக்கூடிய முக்கிய வீரர்களுக்கு இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாவது போட்டிக்கு மட்டுமே முக்கிய வீரர்கள் அனைவரும் திரும்புகிறார்கள்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் முதல் போட்டியில் விளையாட இருக்கின்ற காரணத்தினால், அவர்களுக்கு இந்திய அணியின் அணுகுமுறை குறித்து முழுவதும் புரிய கூடாது என்பதற்காக இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலிய தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் உடல் தகுதி மற்றும் சூரியகுமார் யாதவின் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் ஃபார்ம், இதுவெல்லாம் கொஞ்சம் சரியில்லாமல் இருக்கின்ற காரணத்தினால், சஞ்சு சாம்சனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இந்திய அணியில் கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

- Advertisement -

ஆனால் இந்திய அணி நிர்வாகம் இந்தத் தொடரில் அக்சர் படேல் இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரை மட்டுமே பரிசோதிக்க இருக்கிறது. ஸ்ரேயாஸ் மற்றும் சூரியகுமார் இருவரது இடமும் பத்திரமாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக உலகக்கோப்பை இந்திய அணியில் சஞ்சு சாம்சானுக்கான வாய்ப்பு முற்றிலும் முடிந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

தற்பொழுது அணியில் இடம் பெற்று இருக்கும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 26 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார். ஆனால் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார். இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது அவரை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தொடர்ந்து முன்னோக்கிப் போவதை நான் தேர்வு செய்கிறேன்!” என்று தன்னம்பிக்கையாக வாசகத்தை முன்வைத்து பதிவு ஒன்றை பதிந்திருக்கிறார். ஆனாலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த முடிவு அவரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை!