தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அணியின் மூத்த வீரர் கேஎல்.ராகுல் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.
இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என நட்சத்திர மூத்த வீரர்கள் இல்லாத காரணத்தினால் கேஎல்.ராகுல் மீது பொறுப்பு மிக அதிகமாக இருக்கிறது. எனவே தற்போது அவர்களது இடத்தில் இருந்து அணியை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறார்.
இதன் காரணமாகவே ஐபிஎல் தொடர் முடிவு அடைந்ததும் உடனடியாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இங்கிலாந்து கிளம்பி வந்தார். மேலும் பயிற்சி போட்டியில் விளையாடி ஒரு சதமும் அடித்து தன்னை தயார் படுத்திக் கொண்டார்.
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அணிக்கு நல்ல இலக்கை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் முதல் இன்னிங்சிலும் 42 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்திருந்தார். ஒட்டுமொத்தமாக கேஎல்.ராகுல் பேட்டிங் முன்பிருந்ததை விட மிகவும் பொறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் மாறியிருக்கிறது.
இது குறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறார். ஒரு வீரர் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து அதற்கு மேல் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்வது என்பது அவர் அந்த வடிவத்தை ரசிக்கிறார் என்றே அர்த்தம். மேலும் இதற்கு அதிகமான மன வலிமை தேவை. அவருக்கு அது இருக்கிறது”
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் தனக்குத்தானே கொடுத்த தண்டனை.. அவருக்கு 1 வருடம் பயிற்சியே தேவையில்ல – கோச் வெளியிட்ட தகவல்
“ரிஷப் பண்ட் பெரிய பசியுடன் இருக்கிறார். அவர் இந்த தொடர் முழுக்க தனது பார்மை சுமந்து செல்வார். தற்போது இவருக்கு அடுத்து இந்திய அணியில் இன்னொரு மூத்த வீரரான கேஎல்.ராகுல் இருக்கிறார். அவரும் இந்த தொடர் முழுக்க சிறப்பாக செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் மிகவும் தேவை. அவர் ஒரு போட்டியில் சதம் அடிப்பது ஆச்சரியமோ அல்லது ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடக் கூடியவரோ இல்லை. அவர் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்த தகுதி உள்ள நபர்” என்று கூறி இருக்கிறார்.