ரிஷப் பண்ட் தனக்குத்தானே கொடுத்த தண்டனை.. அவருக்கு 1 வருடம் பயிற்சியே தேவையில்ல – கோச் வெளியிட்ட தகவல்

0
321
Rishabh

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்த ஆண்டு மத்தியில் தனக்குத்தானே ஒரு வினோத தண்டனையை கொடுத்துக் கொண்டதாக இந்திய முன்னாள் பிரெண்ட் அண்ட் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் கூறியிருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரிஷப் பண்ட் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். மேலும் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு அரிய சாதனைகள் காத்திருக்கிறது.

- Advertisement -

மோசமான தொடர்கள்

ரிஷப் பண்டுக்கு கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணம் மோசமானதாக அமைந்திருந்தது. அவருடைய பேட்டிங் அணுகுமுறை மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக அவர் தன்னுடைய பேட்டிங் முறையை முற்றிலுமாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருந்தார்.

இதற்கு அடுத்து சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதன்மை விக்கெட் கீப்பராக இருந்த போதிலும் கூட இரண்டாவது விக்கெட் கீப்பர் கேஎல்.ராகுல் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு தொடர் முழுவதும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். மேலும் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தனது மொபைலில் வாட்ஸ் அப் செயலியை நீக்கிவிட்டதாகவும், அது தன்னுடைய மோசமான செயல்பாட்டுக்கு அவரே கொடுத்துக் கொண்ட தண்டனையாகவும் இருந்தது என கூறப்படுகிறது.

- Advertisement -

ரிஷப் பண்ட் செய்த காரியம்

இதுகுறித்து சோஹம் தேசாய் கூறும்பொழுது ” சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது அவர் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டார். எப்பொழுது நேரம் கிடைத்தாலும் உடனே என்னை ஜிம்முக்கு இழுத்துச் சென்றார். வேலைப்பளு மற்றும் சோர்வை பற்றி அவர் கவலைப்படவே கிடையாது. அவர் சொன்னதெல்லாம் தனக்கு தானே கடுமையாக உழைக்க வேண்டும் என்பதைத்தான். சாம்பியன் டிராபி பைனல் போது அவர் என்னிடம் ஒரு குற்ற உணர்ச்சியுடன் வந்து இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். நான் இதுதான் சரியான நேரம் விடுமுறை எடுக்கலாம் என்று சொன்னேன்”

இதையும் படிங்க : சொன்னா கேளுங்க.. கில் விஷயத்துல இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. இந்திய முன்னாள் கோச் பேட்டி

“ரிஷப் பண்ட் நிறைய திறமைகளை வைத்திருக்கின்ற காரணத்தினால், அவர் அசாதாரணமாக எதையும் செய்யாமலேயே ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட முடியும். நீங்கள் முதல் டெஸ்ட் போட்டியை பார்த்தால் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். மேலும் விக்கெட் கீப்பிங் முழுவதுமாக செய்தார். ஆனால் நீங்கள் அவரிடம் எந்த சோர்வையும் பார்த்திருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -