இந்திய நட்சத்திர வீரர் ஜடேஜாவின் திறமையின்மை காரணமாக இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிக்கல்களை சந்திக்கும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இவ்வாறான கருத்தை கூறியிருக்கிறார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போதும் இதே போல ஜடேஜாவை பற்றி அவர் பேசியது பெரிய பிரச்சினையாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து மண்ணில் ஜடேஜாவுக்கு பவுலராக பெரிய சாதனைகள் எதுவும் கிடையாது. ஆனால் பேட்ஸ்மேனாக கடைசி சுற்றுப்பயணத்தின் கடைசி டெஸ்டில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது பந்துவீச்சில் விக்கெட்டுகள் கிடைக்கும் என்கின்ற உத்தரவாதம் ஏதும் இங்கிலாந்து மண்ணில் இல்லை.
அதே சமயத்தில் ஓவர் ரேட் காக ஒரு முனையில் சிக்கனமாக பந்து வீச ஒரு சுழல் பந்துவீச்சாளர் தற்போது எல்லா அணிகளுக்கும் தேவைப்படுகிறார். ஏனென்றால் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை என்றால் புள்ளிகள் குறைக்கப்படுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு பிரச்சனையை உண்டு செய்கிறது. எனவே ஒரு முனையில் கண்ட்ரோல் கொடுப்பதற்காகவும், முதல் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
இது குறித்து சஞ்சய் மன்ச்ரேக்கர் பேசும் பொழுது ” ரவீந்திர ஜடேஜாவுக்கு திறமை இல்லை என்கின்ற காரணத்தினால் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் பிரச்சனைகளை சந்திக்கும். ஏனென்றால் அவரை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் விளையாடும் விதம் மிகவும் எளிமையாக இருக்கிறது. அதே சமயத்தில் குல்தீப் யாதவ் விளையாடுவது சரியாக இருக்கும்”
இதையும் படிங்க : 2 பேர் என் வாழ்க்கையை வேடிக்கையா மாத்திட்டாங்க.. பாஸ்பால் பத்தி உங்களுக்கு சரியா புரியல – ஜோ ரூட் பேச்சு
“ஆனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இந்த இடத்தில் கம்பீரை யோசிக்கும் பொழுது அவர் எப்பொழுதும் வழக்கமான வழியில் செல்லக்கூடியவர் கிடையாது. எனவே அவர் ஒரே அணியில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என இருவரையும் விளையாட வைத்தாலும் வைக்கலாம். யாருக்குத் தெரியும் செய்யலாம்” என்று கூறி இருக்கிறார்.