இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறை வெறும் அதிரடியானது மட்டுமே கிடையாது என்றும் அது குறித்து இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது என்றும் இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் கூறி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்க இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி பழைய முறையில் அதிரடியாக விளையாடுமா அல்லது பாரம்பரிய முறைக்கு திரும்புமா? என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாஸ்பால் என்றால் என்ன?
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கலமின் மரியாதையான பட்டப்பெயர் பாஸ் என்பதாகும். அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் யாரும் விளையாட அளவுக்கு அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் அணுகுமுறைக்கு இங்கிலாந்து அணியை கொண்டு வந்தார். இதன் காரணமாக இந்த அதிரடியான அணுகுமுறைக்கு பாஸ்பால் என பெயர் வந்தது.
மேலும் இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் பாரம்பரிய டெஸ்ட் பேட்டிங் முறையில் பொறுமையாக விளையாட கூடியவர். அவரையும் மெக்கலம் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் சேர்ந்து அதிரடியாக ரிவர்ஸ் ஸ்கூல் விளையாடும் அளவுக்கு மாற்றிவிட்டார்கள். இது குறித்து நிறைய விமர்சனங்கள் இங்கிலாந்து கிரிக்கெட்டில் இருந்து வருகிறது.
வேடிக்கையாக மாற்றிவிட்டார்கள்
இதுகுறித்து ஜோ ரூட் பேசும்பொழுது “இது எனது தொழில் வாழ்க்கையின் மிகவும் வேடிக்கையான நேரமாக மாறி இருக்கிறது. எங்கள் அணியின் சூழல் மற்றும் நாங்கள் விளையாடும் விதம் என எங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் செய்திருக்கும் வேலைகள் அற்புதமானது. மேலும் இதனுடன் சேர்ந்து நிறைய வேடிக்கையான விஷயங்களும் வந்திருக்கிறது”
இதையும் படிங்க : கில்லின் இளம் அணி இங்கிலாந்தில் இப்படித்தான் பேட்டிங் செய்யணும்.. இந்த 3 விஷயத்தை மறக்க கூடாது – சச்சின் அறிவுரை
“பாஸ்பால் உண்மையில் எப்படி வேலை செய்கிறது என்பது தெரியாமலேயே போகலாம். அதை அதிரடியான பேட்டிங் அணுகுமுறை என்று மட்டுமே வரையறுப்பது சரியானது இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் வெளிப்படையாக இந்த அணுகுமுறை பெரிய மாற்றமாக இருந்து வருகிறது. மற்ற அணிகள் விளையாடும் முறைக்கு இது மிகவும் வேறுபட்டது. தற்போது பாஸ்பால் அணுகுமுறையை மற்றவர்கள் எப்படி புரிந்து இருக்கிறார்கள் அதைவிட இன்னும் நிறைய அர்த்தங்கள் அதற்கு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






