வேற வழி இல்லை.. நித்திஷ் ரெட்டியை தூக்குனாதான் இந்தியா ஜெயிக்க முடியும்.. காரணம் இதுதான் – சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

0
585

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 14-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் உள்ள கபாவில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய அணி கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா கபா டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு முன்பாக சொந்த நாட்டில் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை விளையாடுவதற்கு பந்துவீச்சு திறமையுள்ள ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டரான நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுத்தது. இதனை நித்திஷ் குமார் ரெட்டி சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நிலையில் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 41 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்கள் குவித்தார்.

அது மட்டுமல்லாமல் இந்திய அணி தோல்வி அடைந்த இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 42 ரன்கள் குவித்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார்.இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக இருக்கும் நிலையில் பேட்டிங்கை விட இந்திய அணி பந்துவீச்சை கூர்மைப்படுத்தும் நோக்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இதில் சிந்திக்க வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நிதீஷ் குமார் ரெட்டி அசாதாரணமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். உயர்தர பந்துவீச்சுடன் சிறந்த பேட்டிங் திறமை இருக்கலாம். முதல் தர கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் இந்திய அணி சமநிலை குறித்து சிந்திக்க வேண்டும்.

இதையும் படிங்க:36 ஓவர்.. சீல்ஸ் கிங் பவுலிங் பேட்டிங் கலக்கல்.. பங்களாதேஷ் பரிதாபம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றது

பேட்டிங் பிரச்சனையை தீர்ப்பதோடு பந்துவீச்சை கூர்மையாக்கும் நோக்கில் இந்திய அணி சிந்திக்க வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டி தற்போது சிறந்த பேட்டிங் திறமையை காட்டி இருக்கிறார். யாரோ ஒருவர் பரிந்துரைத்தார். இருந்தாலும் இந்திய அணி பந்துவீச்சை கூர்மையாக சில முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.இந்த சூழ்நிலையில் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிதிஷ்குமார் ரெட்டிக்கு மாற்றுவீராக பந்து வீச்சில் சிறந்த வீரரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்கிற ரீதியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -