வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரையும் வென்றிருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜேடன் சீல்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் வங்கதேசம் இரண்டாவது ஒருநாள்
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 45.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக டான்சிட் ஹாசன் 46 ரன்கள், முகமதுல்லா 62 ரன்கள், டான்சிம் ஹாசன் 45 ரன்கள் குவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஜெடன் சீல்ஸ் ஒன்பது ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடியான லெவிஸ் மற்றும் பிரன்டன் கிங் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 20.1 ஓவரில் 109 ரன்கள் குவித்தனர். ப்ரெண்டன் கிங் 82 ரன்கள், லிவிஸ் 49 ரன்கள் குவித்தனர். அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேர்ட்டி 47 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 45 ரன்கள் குவிக்க, இறுதியில் களமிறங்கிய ரூதர் போர்டு 15 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 24 ரன்கள் குவித்தார்.
ஜேடன் சீல்ஸ் அபாரம்
அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குறித்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜேடன் சீல்ஸ் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். ஏற்கனவே முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இதையும் படிங்க:183 ரன்.. 40 பந்தில் மில்லர் தெறி பேட்டிங்.. லிண்டா மாஸ் பினிஷிங்.. பாகிஸ்தான் அணியை வென்றது தென் ஆப்பிரிக்கா
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி சம்பரதாய ஒரு நாள் போட்டி வருகிறது வியாழக்கிழமை நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் ஆவது வங்கதேச அணி வெற்றி பெற்று ஆறுதல் அடையுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஏற்கனவே டெஸ்ட் தொடரை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. இதற்குப் பிறகு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிறது திங்கட்கிழமை முதல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.






