விராட் கோலியை யாரும் கேள்வி கேட்க முடியாது.. ஆனால் நான் கேப்டனா இருந்தபோது உண்மையா இருந்தார் – ரோகித் சர்மா வெளிப்படை

0
0

​இந்திய அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் வேளையில், விராட் கோலி உடனான தனது பிணைப்பு மற்றும் ரோ-கோ என்ற பெயர் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

​இருவரும் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக இணைந்து விளையாடி பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியை ரசிகர்கள் அன்போடு அழைத்து வரும் நிலையில், களத்திலும் களத்திற்கு வெளியிலும் இருவருக்கும் இடையே சிறந்த நட்பு நிலவி வருகிறது.

- Advertisement -

​வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர்கள் இருவரும், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அணிக்கு மிகப்பெரிய தூண்களாகத் திகழ்ந்து வருகிறார்கள்.

​விராட் கோலி பற்றி ரோஹித் சர்மா பேசும்போது, “எங்கள் இருவருக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பு இருக்கிறது, சர்வதேச கிரிக்கெட்டின் தேவைகளை நாங்கள் நன்கு அறிவோம். எங்கள் வழிகள் வெவ்வேறாக இருக்கலாம், அது ஒவ்வொரு தனிநபருக்கும் இயல்பானதுதான். அவர் அணிக்குச் செய்த பங்களிப்பை எவராலும் கேள்வி கேட்க முடியாது, அது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். எங்களுக்கிடையே எதுவும் மாறவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்”

- Advertisement -

“​இங்கிருந்து அவர் என்ன செய்தாலும் அவர் அதே கோலியாகத்தான் இருப்பார். அவர் நன்றாகப் பயிற்சி பெறவும், ரன்கள் அடிக்கவும், இந்தியாவிற்குப் போட்டிகளை வென்று தரவும் விரும்புகிறார். அவரை நான் இப்படித்தான் பார்க்கிறேன். அவர் கேப்டனாக இருந்தபோதும் இப்படித்தான் இருந்தார், நான் அணியை வழிநடத்தியபோதும் அவர் அப்படியேதான் இருந்தார். இதில் எதுவும் மாற வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -