“சாம்சன் அடித்த சதம் சிறப்புதான்.. ஆனா அதுல இருக்க முக்கியமான விஷயமே வேற..!” – கவாஸ்கர் கண்டுபிடிப்பு!

0
2771
Sanjusamson

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட, மூன்று கேப்டன்கள் தலைமையில், மூன்று அணிகள் அறிவிக்கப்பட்டன,

அறிவிக்கப்பட்ட இந்த மூன்று அணிகளிலும் மிகவும் பலவீனமான அணியாக காணப்பட்டது கேஎல்.ராகுல் தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிதான்.

- Advertisement -

ஏனென்றால் தென் ஆப்பிரிக்க மண்ணில் 50 ஓவர்கள் விளையாடுவதற்கான அனுபவம் கொண்ட வீரர்கள் அந்த அணியில் யாரும் இல்லை. கே.எல்.ராகுல் மட்டுமே அப்படியானவராக இருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டி உடன் திரும்பிவிட்டார்.

மேலும் அந்த அணியில் ரஜத் பட்டிதார், சாய் சுதர்ஷன் மற்றும் ரிங்கு சிங் என புதிய முகங்களுக்கு அறிமுக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இப்படியான நிலையில் எல்லோரது கணிப்பையும் உடைத்து இந்த இளம் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்று அசத்தியிருக்கிறது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பேட்டிங் மிகப்பெரிய காரணமாக சஞ்சு சாம்சன் விளங்கினார். அவர் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்து, இந்திய அணிக்கு தொடரை வென்றதோடு, தன்னை அணியில் இருந்து இனி நீக்க கூடாது என்பதற்கான அறிவிப்பையும் செய்தார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” இந்த சதம் சாம்சன் கேரியரை மாற்றப் போகிறது என்று நான் நினைக்கிறேன். ஒன்று இந்த சதத்தால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் இதைவிட முக்கியமான ஒன்று, அவர் தன்னைத் தானே இதற்கு தகுதியானவர் என்று நம்பத் தொடங்குவார். இதுதான் அவசியமானது.

சில நேரங்களில் நீங்கள் திறமையானவர் என்று உங்களுக்கு தெரிந்தாலும் கூட, ஒரு நல்ல பந்தில் அல்லது ஒரு நல்ல கேட்ச் மூலம் நீங்கள் விக்கெட்டை விடும் பொழுது, உங்கள் குறித்து உங்களுக்கே சந்தேகங்கள் வரத் தொடங்கிவிடும்.

இந்த இன்னிங்ஸில் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய ஷாட் தேர்வு. முன்பு அவருக்கு துவக்கம் கிடைக்கும் பொழுது அதை பெரிய ஸ்கோராக மாற்ற மாட்டார். விரைவில் ஆட்டம் இழந்து விடுவார். ஆனால் நேற்று அவரை குறை சொல்ல முடியாது. அவர் தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டார். மோசமான பந்துக்கு காத்திருந்தார். இதனால் சதம் எளிதாக வந்தது.

இந்த சதம் அவரை தான் எங்கிருக்க கூடியவர் என்பதை உணர்த்தி, அவருக்கு அவரையே நம்ப வைக்கும். ஆனால் அவர் எப்பொழுதும் சதங்கள் அடிக்கக்கூடிய இப்படியான உயர்வான இடத்தில்தான் இருக்கிறார் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவருடைய திறமையை நாம் அறிவோம். ஆனால் இத்தனை நாளா எப்படியோ வராமல் போய்விட்டது. ஆனால் நேற்று அவர் மற்றவர்களுக்காக மட்டுமில்லாமல் தனக்காகவும் அதை வழங்கினார்!” என்று கூறியிருக்கிறார்!