பண்ட் வேண்டாம்.. இது வேற மாதிரியான சஞ்சு சாம்சன்.. பையனை யூஸ் பண்ணுங்க – ஹர்பஜன் சிங் கருத்து

0
43
Harbhajan

இந்த ஆண்டு அடுத்த மாதம் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்க வேண்டும் என ஹர்பஜன்சிங் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றதால் ரிங்கு சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை மேலும் இரண்டு விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் இடது கை வீரரான ரிஷப் பண்ட் மிடில் வரிசையில் விளையாடக்கூடியவர் என்கின்ற காரணத்தினால், ஆரம்பக் கட்டத்தில் அவருக்கே இந்திய பிளேயிங் லெவலில் வாய்ப்பு கொடுக்கப்படும் என பலராலும் நம்பப்படுகிறது. சஞ்சு சாம்சன் சிறப்பாக ஐபிஎல் தொடர் விளையாடியிருந்த பொழுதிலும் கூட, அவர் மேல் வரிசை வீரர் என்பதால் அவருக்கு இடமில்லை என்பது பிரச்சனையாக இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் கூறும்பொழுது ” ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினார். மேலும் அவர் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். அவர் நன்றாக பேட்டிங் செய்ததுடன் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் சஞ்சு சாம்சன் இந்த முறை 60, 70 ரன்கள் என்று தொடர்ந்து எடுத்தார். முன்பு போல அவர் 30, 40 ரன்களுக்கு வெளியேறவில்லை. எனவே அவர் இந்தியாவிற்கு ஏதாவது செய்வார் என்று நம்புகிறேன்.

மேலும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் என்பது தேவையில்லை. இதன் காரணமாக ரிங்கு சிங் விளையாட முடியாமல் போய்விட்டது. அவர் 20 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து தனியாளாக ஆட்டத்தை முடிக்க கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க : உலக கோப்பை விஷயம்.. அழுதுவிட்டு நகர வேண்டியதுதான்.. வேற என்ன செய்ய? – ரிங்கு சிங் பேட்டி

மேலும் இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட போவதும் இல்லை. மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதுவும் கண்டிஷன் சாதகமாக இருந்தால் மட்டுமே நடக்கும். இதேபோல் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது. இந்திய அணி உறுதியாக பாகிஸ்தான் அணியை வெல்லும். ஏனென்றால் கடந்த காலங்களில் அவர்களுக்கு எதிராக நமது வெற்றி சிறப்பாக இருந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்