சமி சிராஜ் ரெண்டு பேரையும் சமாதானம் செய்து பந்தை பிடுங்கினேன் – ரோகித் சர்மா ருசிகர பேச்சு!

0
16903
Rohitsharma

இந்தியாவிற்கு தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட வந்துள்ள நியூசிலாந்த அணி முதலில் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் முதலில் ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியை புரட்டி எடுத்து 34.2 ஓவர்களில் 108 ரன்கள் ஆல் அவுட் செய்தார்கள். முகமது சமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து விக்கெட் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இதை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆடை சதம் அடித்து வெளியேறினார். அடுத்து விராட் கோலி 11 ரன்களில் ஆட்டம் இழக்க கில் இறுதிவரை களத்தில் நின்று 40 ரன்களோடு அணியை வெற்றி பெற வைத்தார். முடிவில் இந்திய அணி 20.1ஓவரில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முகமது சமி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” கடந்த ஐந்து ஆட்டங்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் மிக முன்னேறி விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அவர்களிடம் எதைக் கேட்டோமோ அதை அவர்கள் எங்களுக்கு தந்தார்கள். குறிப்பாக அவர்கள் இதை இந்தியாவில் செய்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு வெளியேவும் இவர்கள் இதை தொடர்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இவர்கள் உண்மையில் அதற்கான திறமையோடு இருக்கக்கூடியவர்கள். நேற்று இரவு நாங்கள் இங்கு பயிற்சி செய்த பொழுது பந்து நன்றாக சீறி சென்றது. நாங்கள் இந்த சவாலை விரும்பினோம். 250 ரன்கள் எடுத்திருந்தால் சவாலாக இருந்திருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” சமி மற்றும் சிராஜ் இருவரும் தொடர்ந்து பந்து வீச விரும்பினார்கள். நான் தான் அடுத்து பெரிய டெஸ்ட் தொடர் வருகிறது மேலும் அணியில் மற்ற பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள் என்று கூறி அவர்களை நிறுத்தினேன். என் பேட்டிங்கில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னிடமிருந்து பெரிய ஸ்கோர் வராவிட்டாலும் நான் எப்படி ஆட்டத்தை அணுகுகிறேன் என்பது திருப்தியாக உள்ளது. ஒரு பெரிய ஸ்கோர் விரைவிலேயே வர காத்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!