பாபர் கோலியை பார்த்தும் திருந்தல.. 34 மாசமா மோசடி.. மீடியா பின்னாடி ஒளிய வேணாம் – சல்மான் பட் விமர்சனம்

0
122
Butt

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் 34 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் சொதப்பி வருவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஒரு சதம் அடித்தெருந்த போதும் கூட, தன்னுடைய 36 ஆவது வயதிலேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த வகையில் பாபர் அசாம் தன்னை சரி செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என சல்மான் பட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஏன் விளையாடவில்லை

பாபர் அசாம் கடைசியாக 34 மாதங்களில் பாகிஸ்தான் மண்ணில் மொத்தம் 14 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் விளையாடி 16.58 ரன் ஆவரேஜில் வெறும் 232 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதில் அதிகபட்சமாக 31 ரன் இருக்கிறது. இந்த 34 மாத காலகட்டத்தில் அவர் சொந்த மண்ணில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

இது குறித்து சல்மான் பட் பேசும் பொழுது “பாபர் உள்நாட்டு முதல் தரப் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை. இது வெளிப்படையாக தெரிந்த ஒரு விஷயமாக இருக்கிறது. முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தான் பாகிஸ்தான் அணிக்கு வந்து நல்ல முறையில் ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் பொழுது பாபர் ஏன் முதல் தர போட்டிகளில் விளையாட மறுக்கிறார்?”

- Advertisement -

ஒளிந்து கொள்ள வேண்டாம்

“நேற்று அவர் விளையாடும் பொழுது எந்த நேரத்திலும் அவுட் ஆகிவிடுவார் என்பது போலவே இருந்தது. அவர் ஒரு பெரிய வீரர். அவரை மக்கள் நேசிக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடி நல்ல முறையில் திரும்பி வரவேண்டும். இதிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள நினைக்க கூடாது. நீங்கள் விளையாட்டை விட பெரிய ஆள் கிடையாது”

இதையும் படிங்க : 23 ஆண்டுகள்.. பட்டைய கிளப்பும் வெஸ்ட் இண்டீஸ்.. சாதித்த கேம்பல்.. இந்திய அணி தடுமாற்றம்

“தற்போது உள்நாட்டில் ஹனிப் முகமது டிராபி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாபர் இந்த தொடரை தவற விட்டு விட்டார். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து சிறப்பு தொகை பெற்று இந்த தொடரில் விளையாடிட்டு இருக்க வேண்டும். அவருக்கு இருக்கும் ஆதரவுக்கு, தான் சரியாக செயல்படாததற்கு அவர் தன்னைத்தானே குற்றம் சொல்லிக் கொள்ள வேண்டும். அவர் தனக்கு உதவி கொள்ளப் போகிறாரா? இல்லை சமூக ஊடக ஆதரவை நம்பியிருக்கப் போகிறாரா? என்பது அவரது முடிவு” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -