கோடியில் சம்பளம்..பாகிஸ்தான் வரலாற்று சிறப்பான சம்பளத்தை அறிவித்தது.. இந்தியாவை விட அதிகமா குறைவா?

0
1722
PCB

டி20 கிரிக்கெட் வருகைக்கு பிறகு, கிரிக்கெட் மிகப்பெரிய வணிக ரீதியான விளையாட்டாக மாறி இருக்கிறது. வீரர்கள் ஆரம்பகாலத்தை விட தற்பொழுது மிக அதிகமான பொருளாதாரத்தை ஈட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்!

இதற்கு முன்பான காலகட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டும் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட கிரிக்கெட் வாரியங்களாக, உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தக்கூடிய அமைப்புகளாக இருந்தன.

- Advertisement -

ஆனால் டி20 கிரிக்கெட் வருகையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடர் நடத்த ஆரம்பித்த பிறகும், ஒட்டுமொத்தமாக நிலைமைகள் தலைகீழாக மாறி, பொருளாதாரம் மற்றும் ஆதிக்கம் இரண்டிலும் உலக கிரிக்கெட்டில் இந்தியா எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது.

இந்தியாவில் ஏ ப்ளஸ், ஏ, பி, சி, என 4 பிரிவுகளில் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் முறையே 7 கோடி, 5 கோடி, 3 கோடி, 1 கோடி என சம்பளம் வழங்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ட்ப்ரீத் பும்ரா நால்வரும் ஏ ப்ளஸ் பிரிவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்த முடிவு செய்து அறிவித்திருக்கிறது. காரணம் அங்கு சமீபத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு அவர்களுடைய பணத்தின் மதிப்பு வெகுவாக சரிந்தது. இதன் காரணமாக அந்த தேவை உருவாகி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வின் அடிப்படையில் மாதத்திற்கு 12 அரை இலட்ச ரூபாய் ஊதியத்தை ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாகின் ஷா அப்ரிடி ஆகியோர் பெறுவார்கள். வருடத்திற்கு இவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும். இந்திய கிரிக்கெட் வாரியம் தனது “பி” பிரிவு வீரர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பி சம்பள பிரிவில் வரும் வீரர்களுக்கு மாதம் எட்டரை லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். இது வருடத்திற்கு ஒரு கோடியை தொடும். மேலும் சி மற்றும் டி பிரிவுக்கு மாதத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயில் ஆரம்பித்து நாலரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு பாகிஸ்தானின் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் ஆஸம் வருடத்திற்கு 43 லட்சம் ரூபாய்தான் சம்பளம் வாங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீரர்கள் சம்பள உயர்வை கேட்டும் வந்தார்கள். தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் ஓரளவுக்கு உயர்ந்திருக்கும் காரணத்தால், தற்பொழுது வீரர்களுக்கான சம்பளமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது!