இந்திய கிரிக்கெட்

கேரளா டி20 லீக்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் உட்பட.. அதிக தொகைக்கு போன போல முதல் 5 வீரர்கள்

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை பின்பற்றி தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் போன்று கேரளாவிலும் கேரளா கிரிக்கெட் லீக் நடைபெற இருக்கிறது. இதில் மொத்தமாக இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

இதற்கான ஏலம் தற்போது நடைபெற்ற நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் இந்தத் தொடரில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார். இந்த டி20 கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 2ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் திருவனந்தபுரம் ராயல்ஸ், திருச்சூர் டைட்டன்ஸ், கொச்சி புளூ டைகர்ஸ், காலிகட் குளோப்ஸ்டார்ஸ், ஆலப்பி ரிப்பிள்ஸ் மற்றும் கொல்லம் மாலுமிகள் என்று ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதில் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் எம் சஜீவன் 7.4 லட்ச ரூபாய்க்கு திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். இந்த சீசனில் ஒரு அணி அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராகவும் இவரே இருக்கிறார்.

33 வயதான ஆல் ரவுண்டர் வீரர் இந்தத் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு அடுத்த இடத்தில் திருச்சூர் டைட்டன்ஸ் அணியில் வருண் நாயனார் 7.2 லட்ச ரூபாய்க்கு இரண்டாவது அதிகபட்ச வீரராக வாங்கப்பட்டிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விதமாக முன்னாள் சிஎஸ்கே வீரரான கே எம் ஆசிப் 5.2 லட்ச ரூபாய்க்கு கொல்லம் மாலுமி அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இதில் முக்கிய வீரர்களாக பிஏ அப்துல் பாசித் – திருவனந்தபுரம் ராயல்ஸ், சச்சின் பேபி – கொல்லம் மாலுமிகள், முகமது அசாருதீன் -ஆலப்புழை சிற்றலைகள், பாசில் தம்பி – கொச்சி ப்ளூ டைகர்ஸ், விஷ்ணு வினோத் – திருச்சூர் டைட்டன்ஸ் , ரோகன் எஸ் குன்னம்மாள் – காலிகட் குலோப்ஸ்டார்ஸ் ஆகிய அணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த போட்டிகள் அனைத்தும் கிரீன் பீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்தத் தொடருக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தொடரில் விளையாட மாட்டார் எனவும் தகவல்கள் வெளிவருகிறது.

இதையும் படிங்க:111 நாட்கள் 10 டெஸ்ட்.. முடிவுக்கு வரும் ஹர்திக் பாண்டியா விவகாரம்.. ஆஸியில் மேஜிக் கிடையாது

இந்த தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 5 வீரர்கள்:

1.எம்எஸ் அகில் – திருவனந்தபுரம் ராயல்ஸ் (INR 7.4 லட்சம்)

2.வருண் நாயனார் – திருச்சூர் டைட்டன்ஸ் (INR 7.2 லட்சம்)

3.மனு கிரிஷன் – கொச்சி புளூ டைகர்ஸ், சல்மான் நிசார் – காலிகட் குளோப்ஸ்டார்ஸ் (INR 7 லட்சம்)

4.அஜ்னாஸ் எம். – காலிகட் குளோப்ஸ்டார், கிருஷ்ண பிரசாத் – ஆலப்பி ரிப்பிள்ஸ் (INR 6.2 லட்சம்)

5.KM ஆசிப் – கொல்லம் மாலுமிகள் (INR 5.2 லட்சம்)

- Advertisement -
Published by