111 நாட்கள் 10 டெஸ்ட்.. முடிவுக்கு வரும் ஹர்திக் பாண்டியா விவகாரம்.. ஆஸியில் மேஜிக் கிடையாது

0
1484
Hardik

இந்திய கிரிக்கெட்டில் தேசிய அணிக்கு விளையாடும் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடும் கலாச்சாரம் மீண்டும் திரும்ப இருக்கிறது. அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா குறித்து பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு முக்கிய விஷயம் முடிவுக்கு வந்ததாகவும் தெரிகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி துவங்கிய செப்டம்பர் 24ஆம் தேதி வரையில் உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலிப் டிராபி நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் அணிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குவதற்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்பட 10 வீரர்களை துலீப் டிராபியில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடும் படி கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்ட பத்து வீரர்களின் பட்டியலில் இந்திய ஏகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பெயர் இடம் பெறவில்லை. அவரை டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம்விரும்பவில்லை என்றும், அவர் தொடர்ந்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கு விளையாடினால் போதும் என்று நினைப்பதாகவும் தெரிய வருகிறது.

- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியின் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் நான்காவது வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்திய முன்னாள் வீரர்கள் சிலரும் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்கள்.

ஹர்திக் பாண்டியா குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து ஓவர்கள் வீச முடிந்தால், அவரால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பெற்று நான்காவது வேகப்பந்து வீச்சாளராக சர்துல் தாக்கூர் இடத்தில் விளையாட முடியும். எனவே ஹர்திக் பாண்டியா மற்றும் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் போன்ற இம்பேக்ட் பிளேயர்களை ஆஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி நிர்வாகம் மேஜிக் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : பும்ராவை வைத்து பிசிசிஐ போடும் புதிய திட்டம்.. கம்பீருக்கு புதிய நெருக்கடி.. சரி வருமா?

இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று துலீப் டிராயில் அவர் பெயர் பரிசீலிக்கப்படாததின் மூலமாக தெரிய வருகிறது. இதனை அடுத்து இனி ஹர்திக் பாண்டியா இந்திய வெள்ளை பந்து வடிவத்தில் மட்டுமே தொடர்ந்து விளையாடுவார் என்று பேசி வருகிறார்கள். மேலும் அவருடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவே தெரிகிறது. இந்திய அணி செப்டம்பர் 19ஆம் தேதி ஆரம்பித்து அடுத்து 2025 ஜனவரி வரையில் 111 நாட்களில் 10 டெஸ்ட் போட்டி விளையாட இருக்கிறது. இதில் ஹர்திக் பாண்டியாவை பார்க்க முடியாது!

- Advertisement -