கடைசி பால் சிக்ஸ் அடித்து சாய் சுதர்சன் ஒத்தையாக முடிச்சுக்கொடுக்க… சிஎஸ்கே வீரர் 5 விக்கெட்டுகள் எடுக்க.. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா ஏ இளம்படை!

0
1838

எமர்ஜிங் ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஏ அணியை பந்தாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா ஏ அணி சாய் சுதர்சன் பேட்டிங்கிலும், ராஜ்வரதன் பவுலிங்கிலும் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்தனர்.

எமர்ஜிங் ஆசியக்கோப்பையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

பாகிஸ்தான் ஏ அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சயிம் ஆயுப் மற்றும் ஓமர் யூசுப் இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் ராஜ்வரதன் எடுத்து அசத்தினார். துவக்க வீரர் சாஹிப்சதா 35 ரன்கள் அடித்துகொடுத்தார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஹசிபுல்லா 27 ரன்கள் மற்றும் முபாசிர் கான் 28 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். காசிம் கான் 48 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

கடைசி வரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் மேகிரான் மும்தாஸ் 25 ரன்கள் அடித்து இருந்தார். 48 ஓவர்கள் பிடித்திருந்த பாகிஸ்தான் அணி 25 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய அணி சார்பில் ராஜ்வர்தன் ஐந்து விக்கெட்டுகளும், மனவ் சுதர் 3 விக்கெடுகளும் எடுத்திருந்தனர். நிசான்த் சிந்து மற்றும் ரியான் பராக் இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.

206 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஓபனிங் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. இதில் அபிஷேக் சர்மா 20 ரன்களுக்கு அவுட் ஆனார்.

இரண்டாவது விக்கெட்டிற்கு சாய் சுதர்சன் மற்றும் நிகின் ஜோஸ் இருவரும் ஜோடி சேர்ந்து 99 ரன்கள் சேர்த்தனர். நிகின் ஜோஸ் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் யாஷ் துல் உள்ளே வந்தார்.

ஆரம்பம் முதல் அவுட்டாகாமல் அபரமாக ஆடிவந்த சாய் சுதர்சன் சதமடித்தார். இவர் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 110 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். யாஷ் துல் 21 ரன்கள் அடித்திருந்தார்.

2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்தியா ஏ அணி 36.4 ஓவர்களில் 206 ரன்கள் குவித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

எமர்ஜிங் ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று தன்னுடைய குரூப்பில் முதலிடத்தில் பலமாக இருக்கிறது அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்று இருக்கிறது