களத்தில் சுருண்டு விழுந்த பண்ட்.. 2வது நாள் ஆட்டத்தில் விளையாடுவாரா.? சாய் சுதர்சன் கொடுத்த முக்கிய அப்டேட்.. IND VS ENG

0
451

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் நேற்று முதல் நாள் ஆட்டத்தின் போது காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டின் காயம் குறித்து சாய் சுதர்சன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் காயம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அதற்குப் பிறகு இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்து தொடரில் பின்தங்கி இருக்கும் நிலையில் நான்காவது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் நேற்று முதல் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இதில் முதல் பேட்டிங் செய்து விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்துள்ளது. இதில் விக்கட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 48 பந்துகளில் 37 ரன்கள் குறித்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து காலில் தாக்கியதால் ஆடுகளத்திலேயே சுண்டு விழுந்த அவர், பணியாளர்களின் உதவியோடு ரத்தம் சுட்டச் சொட்ட ட்ரெஸ்ஸிங் ரூம் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சாய் சுதர்சன் இன்றைய நாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாய் சுதர்சன் அப்டேட்

இதுகுறித்து அவர் கூறும் போது “அவர் நிச்சயமாக நிறைய வலியில் இருந்தார். எனவே அதற்கான சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய இரவு முடிந்து நாளை தான் அவர் விளையாடுவாரா? என்பது குறித்து தகவல் வெளிவரும். நிச்சயமாக அவர் ஒரு பெரிய மிஸ் ஆக இருப்பார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் அவர் இன்றைய ஆட்டத்தில் நன்றாக பேட்டிங் செய்தார். மேலும் இன்றைய போட்டியில் நாங்கள் அவரை தவற விடுகிறோம். அவர் திரும்ப வரவில்லை என்றால் நிச்சயம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:இங்கிலாந்தில் டிராகனாக மாறிய ராகுல்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு மைல்கல்லை தொட்டு அபாரம்

ஆனால் அதே சமயத்தில் பேட்டிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்களும் மற்றும் ஆல்ரவுண்டர்களும் இருக்கிறார்கள். தோல்வியை சமாளிப்பதற்கு நாங்கள் எங்கள் சிறந்ததை கொடுத்து நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முயற்சிப்போம்” என்று சாய் சுதர்சன் பேசியிருக்கிறார். தற்போது நான்கு விக்கெடுகள் இழந்து விளையாடி வரும் இந்திய அணி இன்னும் 6 விக்கட்டுகள் மீதம் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு நிச்சயமாக நெருக்கடி கொடுக்கும் முயற்சிக்கும் என்பதை எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே ரிஷப் பண்ட் இன்றைய நாளில் விளையாடுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -