இங்கிலாந்தில் டிராகனாக மாறிய ராகுல்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு மைல்கல்லை தொட்டு அபாரம்

0
234

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளத்தை அமைத்திருக்கிறார்கள்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி இருக்கின்றது. இந்த தருணத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியால் இந்திய அணி பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

- Advertisement -

1000 ரன்கள் எட்டிய ராகுல்:

இந்திய அணி வீரர்கள் ஆரம்ப முதலே கவனமுடன் விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். தற்போது முதல் நாள் மதியநேர உணவு இடைவேளையின் போது இந்திய அணி 26 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்திருக்கிறது. இது குறித்து பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், தாஜ்மஹால் கம்பீரமாக இருப்பதற்கு நல்ல அடிதளம் தான் காரணம்.

இதேபோல் இந்திய அணி பெரிய இன்னிங்ஸை அமைப்பதற்கு இந்த நல்ல அடித்தளம் ஒரு காரணமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த சூழலில் ராகுல் பல்வேறு சாதனைகளை தற்போது படைத்திருக்கின்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை எடுத்து ராகுல் அசத்தி இருக்கின்றார்.

- Advertisement -

ராகுல் சாதனை:

இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ராகுல், டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி ஆகியோருக்கு பிறகு இந்த மைல் கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் முதல் முறையாக ஒரே தொடரில் 400 ரன்கள் அடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: மான்செஸ்டரில் அறிமுகம் ஆன சிஎஸ்கே வீரர்.. இந்திய ஜாம்பவானுக்கும் அன்சூல் காம்போஜ்க்கும் இருக்கும் 2 ஒற்றுமை

ராகுல் இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 392 முதல் அடித்திருந்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக அவர் ஒரே தொடரில் 400 ரன்கள் எடுத்திருக்கின்றார். இதன் மூலம்  இங்கிலாந்து மண்ணில் ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய தொடக்க வீரர்கள் பட்டியலில் ராகுல் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார். கவாஸ்கர் 542 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் தற்போது 408 ரன்கள் எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு முரளி விஜய் 402 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது ராகுல் அதனை முறியடித்து இருக்கின்றார்.

- Advertisement -