வெளியில் உட்கார வைக்கப்பட்ட சிஎஸ் கே வீரர்கள் தான் இப்போது ஹீரோக்கள்… சாய் சுதர்சன் பேட்டிங்கில் மிரட்டல்! – இந்தியா ஏ அபார வெற்றி!

0
13433

பவுலிங்கில் சிஎஸ்கே வீரர்கள் ராஜ்வர்தன், நிஷாந்த் சிந்து சேர்ந்து 7 விக்கெட்டுகள் எடுக்க, பேட்டிங்கில் சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா அபாரமாக செயல்பட்டதால் இந்தியா ஏ அணி நேபாளம் அணியை வீழ்த்தி வென்றது.

எமர்ஜிங் ஆசிய கோப்பையில் விளையாடி வரும் இளம் வீரர்கள் கொண்ட இந்தியா ஏ அணி முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் நேபாளம் ஏ அணியை எதிர்கொண்டது.

- Advertisement -

போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் பவுடல் 65 ரன்கள் அடித்தார். குல்ஷன் ஜா 38 ரன்கள் அடித்தார். மாற்று வீரர்கள் எவரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இவர்களுக்கு அடுத்த அதிகபட்சமாக தேவ் 14 ரன்கள் அடித்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே வீரர்கள் ராஜ்வரதன் மூன்று விக்கெட்டுகள் மற்றும் நிசான்த் சிந்து நான்கு விக்கெடுகள் கைப்பற்றினார். ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

39.2 ஓவர்களை மட்டுமே பிடித்த நேபாளம் அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியிடம் நேபாளம் அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க ஜோடி சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். அபிஷேக் சர்மா எனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

12 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 87 ரன்கள் குவித்து அவுட் ஆனார் அபிஷேக் சர்மா. பின்னர் சாய் சுதர்சன் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் சேர்ந்து போட்டியை ஃபினிஷ் செய்தனர். சாய் சுதர்சன் 58 ரன்களும், துருவ் ஜூரல் 21 ரன்களும் அடித்திருந்தனர். இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர்.

22.1 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமர்ஜிங் ஆசிய கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது