“ஆஸ்திரேலியாவுக்கு தியாகம் பண்ணு.. ஐபிஎல் வேணாம்” – கிரீனை எச்சரிக்கும் ஆஸி லெஜன்ட்!

0
604
Green

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் முக்கியமான வீரராக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இருக்கிறார். இவர் அணிக்கு மிகவும் தேவையான ஒரு சமநிலையை கொடுக்கக்கூடிய வீரர்.

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஆறு மாத காலமாக ஆசஸ் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் என தொடர்ந்து மாறி மாறி இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்தியா 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த பொழுது, டெஸ்ட் தொடரில் டிசம்பர் மாதம் கேமரூன் கிரீன் அறிமுகமானார். அவருக்கு அந்தத் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. ஆனாலும் அவருடைய முக்கியத்துவம் தெரிந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுத்தது.

தற்பொழுது கேமரூன் கிரீன் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக இருந்து வருகிறார். பேட்டிங் வரிசையில் முக்கியமான இடத்தில் வரும் அவர், பந்துவீச்சில் நான்காவது வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற முக்கிய இடத்தை நிரப்புகிறார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 17.50 கோடி கொடுத்து வாங்கியது. அதே சமயத்தில் தற்பொழுது பெங்களூர் அணிக்கு அதே விலைக்கு டிரேடிங் செய்திருக்கிறது. கேமரூன் கிரீனில் முதல் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒரு சதத்துடன் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு இவர் சில காலம் மிகவும் தேவையான வீரராகவே இருப்பார் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் கேமரூன் குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பிராட் ஹாடின் கூறும்பொழுது ” நீங்கள் பார்த்தால், ஆஸ்திரேலியாவின் மூன்று வேகபந்து பேச்சாளர்களான கம்மின்ஸ், ஹேஸில்வுட், ஸ்டார்க் ஆகியோர் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் தராமல் ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தந்த காலக்கட்டம் இருக்கிறது.

சில சமயம் கேமரூன் கிரீன் தன்னுடைய பணிசுமையை பொறுத்து ஐபிஎல் கிரிக்கெட்டை விளையாடாமல் இருக்க வேண்டும். ஐபிஎல் கற்றுக் கொள்வதற்கான சிறந்த வழி. ஆனால் பணிச்சுமை அதிகம் இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சத்தை தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் தொடரை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இதற்கு வேறு வழியே கிடையாது!” என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்!

- Advertisement -