ரஞ்சி பைனல்.. மும்பையை பேட்டிங்கில் கவிழ்த்த ரகானே ஸ்ரேயாஸ்.. கடுப்பான சச்சின் கோபமான பதிவு

0
472
Sachin

இந்த வருடத்துக்கான உள்நாட்டு ரஞ்சி டெஸ்ட் டிராபியின் இறுதிப்போட்டி விதர்பா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 81 ரன்கள் சேர்த்தது. துவக்க ஆட்டக்காரர் புபேன் லல்வானி 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மும்பை அணி அப்படியே ஒட்டுமொத்தமாக சரிந்தது. பிரிதிவி ஷா 46, முசீர் கான் 6, கேப்டன் ரகானே 7, ஸ்ரேயாஸ் ஐயர் 7, ஹர்திக் தாமூர் 5, சாம்ஸ் முலானி 13, தனுஷ் கோட்டியன் 8 ரன்கள் என வரிசையாக வெளியேறினார்கள்.

இந்த நிலையில் சர்துல் தாக்கூர் அதிரடியாக அரை சதம் அடிக்க தற்பொழுது மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த ரஞ்சித் தொடர் முழுக்க கேப்டன் ரகானே ஆட்டம் மிக மிக மோசமாக இருந்து வருகிறது. ரன் இல்லாமல் பலமுறை ஆட்டம் இழந்து இருக்கிறார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து இந்தியா மற்றும் மும்பை அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறுகிறார். மூத்த பேட்ஸ்மேன்களின் ஆட்டம் பொறுப்பற்ற முறையில் இருந்தது.

மும்பையை சேர்ந்த இந்திய லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து மிகவும் ஏமாற்றமும் கோபமும் அடைந்திருக்கிறார். மும்பை அணியின் சரிவை பார்த்த அவர், மும்பை அனுபவ பேட்ஸ்மேன்கள் ரகானே போன்றவர்கள் விளையாடிய விதத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

அதில் சச்சின் கூறும்பொழுது “மும்பை அணிக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்த பிறகு, மும்பை பேட்ஸ்மேன்கள் சாதாரண கிரிக்கெட்டை விளையாடி விக்கெட்டுகளை இழந்தார்கள். அதே சமயத்தில் விதர்பா அணி விஷயங்களை எளிமையாக வைத்து மும்பை அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த போட்டியில் பல பரபரப்பான செஷன்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : ரஞ்சி பைனல்.. மும்பையை பேட்டிங்கில் கவிழ்த்த ரகானே ஸ்ரேயாஸ்.. சச்சின் கோபமான பதிவு

இந்த ஆடுகளத்தில் புல் இருக்கிறது. அதே சமயத்தில் போகப் போக சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் உதவும். மும்பை துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கம் பெற்ற பிறகு, விதர்பா போட்டிக்குள் திரும்ப வந்த விதத்தில் அந்த அணி மகிழ்ச்சியாக இருக்கும். முதல் செஷன் விதர்பா அணிக்கு சொந்தமானது” எனக் கூறியிருக்கிறார்.