கோலி 49 சத ரெக்கார்டை முறியடிப்பது சந்தோசம்.. ஆனா இது நம்ம கிட்ட இருக்கணும்.. சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்த பேட்டி.!

0
33485

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி இன்று மும்பையில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 357 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதனை துரத்தி ஆடிய இலங்கை வெறும் 19.4 ஓவர்களில் 55 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது ரோகித் சர்மா 4 ரன்னில் அவுட் ஆன நிலையில் கில் மற்றும் விராட் கோலி இரண்டாவது விக்கெட்டுக்கு 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைந்தது. 48 சதங்களுடன் இருக்கும் விராட் கோலி இன்று சச்சினின் சொந்த ஊரான மும்பையில் வைத்து அவரது சாதனையான 49-வது சதத்தை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக 88 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

நிச்சயமாக விராட் கோலியும் சச்சினுக்கு முன்பாக அவரது சாதனையை சமன் செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பார். இது ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் பார்வையாளர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. 47 ஒரு நாள் போட்டி சதங்களுடன் உலகக்கோப்பைக்கு வந்த விராட் கோலி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது 48வது சதத்தை பூர்த்தி செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 91 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய போட்டியில் அவர் 88 ரண்களில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்று மும்பையில் நடைபெற்ற போட்டியை காண வந்திருந்த சச்சின் டெண்டுல்கர் தனது சாதனை முறியடிக்கப்படுவது பற்றி நெகிழ்ச்சியான பதிலை அளித்திருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இது தொடர்பாக இன்றைய போட்டியில் இன்னிங்ஸ் பிரேக்கின் போது தொலைக்காட்சி நெறியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நெறியாளர் சச்சினிடம்” விராட் கோலி 88 ரன்களில் ஆட்டம் இழந்ததால் உங்களது சாதனை இன்னும் ஒரு சில நாட்களுக்கு உங்களது பேரிலேயே இருக்கும் மகிழ்ச்சி தான்” என கிண்டலாக கூறினார். இதற்கு பதில் அளித்த சச்சின் டெண்டுல்கர்” நான் ஒரு நாள் போட்டிகளில் எடுத்த 49 சதங்கள் சாதனை என்னுடையது அல்ல. அது இந்தியாவின் சாதனை. அந்த சாதனை இந்தியரால் முறியடிக்கப்பட்டு இந்தியாவில் இருக்கும் வரை எனக்கு மகிழ்ச்சி தான்” என புன்னகையுடன் பதிலளித்தார்.

இந்த பதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களையும் வென்றிருக்கிறது. சச்சின் ஓய்வு பெற்ற 2013 ஆம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் எடுத்ததற்காக பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சச்சினிடம் உங்களது இந்த சாதனையை யாரும் முறியடிப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரில் ஒருவர் எனது சாதனைகளை முறியடிப்பார் என தெரிவித்திருந்தார். தற்போது விராட் கோலி சச்சின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நெருங்கி இருக்கிறார். மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணியுடன் ஆன போட்டியின் போது முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.