இவரால் எந்த நேரத்திலும் எதையும் செய்ய முடியும் – இந்தியா வேகப்பந்து வீச்சாளரை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்

0
176
Sachin Tendulkar

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் டெஸ்ட் தொடரை தொடங்க உள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை தென்னாப்பிரிக்க நாட்டில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது கிடையாது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இந்த மோசமான வரலாற்றை மாற்ற இந்த முறை அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் முக்கிய பலமே பந்துவீச்சு தான். அதுவும் முக்கியமாக விராட்கோலி கேப்டனான பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் புதிய உத்வேகம் பெற்றுள்ளனர். பும்ரா, இஷாத், ஷமி போன்ற மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் விராட் கோலியின் தலைமையில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அப்படி இந்த வேகப்பந்து வீச்சு படையில் தற்போது புதிதாக இணைந்துள்ள வீரர்தான் முகமது சிராஜ். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் முதன்முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் அணியினருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்வாறு போராட்ட குணமுள்ள சிராஜை தற்போது இந்திய அணியில் ஜாம்பவான் பேட்டிங் வீரரான சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியுள்ளார். எப்போதும் மிகவும் எனர்ஜியுடன் புத்துணர்ச்சியாக இருப்பவர் சிராஜ் என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்பொழுது ஆட்டத்தில் முதல்வராக இருந்தாலும் அல்லது கடைசி ஓவராக இருந்தாலும் அவரின் பந்துவீச்சை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் அவர் பந்து வீச்சில் சார்ந்த அத்தனை விஷயங்களையும் மிகக் குறுகிய காலத்தில் எளிதாக புரிந்து கொள்கிறார் என்றும் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சச்சினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் சச்சினின் வார்த்தைகள் தன்னை மிகவும் ஊக்கப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். பல சிறப்பான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட சச்சின் டெண்டுல்கரே இவ்வாறு திராட்சை புகழ்கிறார் என்றால் அவரின் பங்களிப்பு தென் ஆப்ரிக்க தொடரில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.