2021 டி20 உலகக் கோப்பை தொடரில், அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகளில் சிறந்த 11 வீரர்கள் – சச்சின் டெண்டுல்கர் தேர்வு

0
90
Best T20WC XI Of Sachin Tendulkar

2021 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை டி20 தொடர் நேற்று இரவு நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை மிக எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று அடைந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஆண்கள் அணி முதல் முறையாக உலக கோப்பை டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடிய வீரர்களில் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை எல்லா முன்னணி வீரர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில், அரையிறுதிக்கு முன்னேறிய நான்கு அணிகளில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களைக் கொண்ட அணியை தற்பொழுது அவர் தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அந்த அணியை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

டாப் ஆர்டர் வரிசையில் டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் மற்றும் பாபர் அசாம்

ஓபனிங் வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை சச்சின் தேர்வு செய்துள்ளார். இவர்கள் இருவருமே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர்களது அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். குறிப்பாக டேவிட் வார்னர் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய விதம் ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதும் விளையாடிய விதம் ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து 3-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் இருக்கிறார். ஆறு இன்னிங்ஸ் வலி 303 ரன்கள் குவித்து நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அவர் இருக்கிறார்.

மிடில் ஆர்டர் வீரர்களாக கேன் வில்லியம்சன், மொயின் அலி, மிட்செல் மார்ஷ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன்

பின்லாடன் வரிசையில் 4-வது மற்றும் 5-வது இடத்தில் கேன் வில்லியம்சன் மற்றும் மொயின் அலி இருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து 6வது மற்றும் 7ஆவது இடத்தில் மிட்செல் மார்ஷ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் இருக்கின்றனர். இவர்களில் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவருமே சக்கை போடு போட்டனர். இறுதியில் வெற்றி மிட்செல் மார்ஷுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காக மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டன் மிடில் ஆர்டர் இடத்தில் இறங்கி மிகவும் அதிரடியாக விளையாடினார். சில சமயங்களில் இவர்கள் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்களாக பேட் கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிரென்ட் போல்ட்

பந்து வீச்சாளர்கள் ஆடம் ஜாம்பா மற்றும் பெண் போல் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவருமே நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மிக அற்புதமாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர்கள் இருவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் அனைத்து போட்டிகளிலும் மிக அற்புதமாக பந்து வீசினர். இவர்கள் இருவரது பௌலிங் எக்கானமி தொடர் முழுவதும் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக நேற்று நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இவர்கள் இருவரது எக்கானமியும் மிக அற்புதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.