“தம்பிங்களா இங்கிலாந்துக்கு இவ்வளவு தொந்தரவா கொடுப்பிங்க?” – சச்சின் ஸ்பெஷல் மெசேஜ்

0
1174
Sachin

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது, மிகவும் முக்கியமான வெற்றியாக இந்திய கிரிக்கெட்டில் பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு வெற்றிகளுமே இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இல்லாமல் வந்திருக்கிறது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இந்திய அணி முதல் போட்டியில் தோற்று, அதற்குப் பிறகு மீண்டும் வந்து இரண்டு போட்டிகளை வென்று தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.

மேலும் வழக்கமான சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்துக் கொள்ளாமல் பெற்ற வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இப்படியான காரணங்களால் எங்கிருந்து எதிர்காலத்திற்கான இந்திய அணி உருவாகிறது என்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் பார்க்கிறார்கள். எனவே இந்த வெற்றிகள் இந்திய கிரிக்கெட்டில் இந்த காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆரம்பித்து மூன்றாவது போட்டி வரை இளம் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலின் எழுச்சி மிகப்பெரியதாக அமைந்திருக்கிறது. அவரை எப்படி இந்திய சூழ்நிலையில் கட்டுப்படுத்துவது என்று வெளியில் இருப்பவர்களுக்கும் தெரியவில்லை. அவருக்கு தனித்த பலவீனம் எதுவும் கிடையாது என்று கெவின் பீட்டர்சன் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேலும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக அறிமுக வீரர்கள் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

மூன்றாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை பேட்ஸ்மேன்களான இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடி 158 பந்துகளில் 172 ரன்கள் ஆட்டம் இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிக்க, சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடி அரைசதம் அடித்திருக்கிறார்.

இந்த இரண்டு இளம் வீரர்களையும் பாராட்டி முன்னாள் இந்திய மற்றும் மும்பை வீரரான சச்சின் செய்துள்ள ட்வீட்டில் “டபுள் ஹண்ட்ரேட்.. டபுள் பிப்டி.. இந்த ஜெயஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் ஜோடி இங்கிலாந்து அணிக்கு இரட்டை தொந்தரவை கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : WTC புள்ளி பட்டியல்.. ஆஸிக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து.. வெற்றியால் இந்தியா ஏறுமுகம்

இவர்கள் இருவரும் விளையாடியதை என்னால் நேரலையில் பார்க்க முடியவில்லை. ஆனால் இவர்கள் விளையாடிய விதத்தைப் பற்றி மற்றவர்கள் பேசியதை கேட்டு அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து இப்படியே செல்லுங்கள்” என்று வாழ்த்தி பாராட்டி கூறியிருக்கிறார்.