WTC புள்ளி பட்டியல்.. ஆஸிக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து.. வெற்றியால் இந்தியா ஏறுமுகம்

0
386
WTC

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றதின் மூலம் தற்பொழுது தொடரில் இரண்டுக்கு ஒன்று என முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நியூசிலாந்து அணி உள்நாட்டில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வென்ற காரணத்தினால், தொடர்ந்து புள்ளி பட்டியலில் 75% வெற்றியுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக முதல் இரண்டு இடங்களில் இருந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் ஒரு இடம் பின்தங்கி கீழே வந்தன. இந்திய அணி மூன்றாவது இடத்தில் தொடர்ந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் கிடைத்த நல்ல துவக்கத்தை இங்கிலாந்து கோட்டை விட்ட காரணத்தினால் படுதோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணியின் இந்த தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷி புள்ளி பட்டியலில் தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

இந்திய அணி பெற்ற வெற்றியின் காரணமாக, இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதே சமயத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்திற்கு இறங்கி இருக்கிறது.

அடுத்து ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி கவனிக்க வேண்டிய தொடராக அமையும்.

இதையும் படிங்க : “ஆண்டர்சனையும் இதையும் விடமாட்டேன் ஸார்” – கும்ப்ளேவுக்கு 2 வாக்குறுதி தந்த ஜெய்ஸ்வால்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

நியூசிலாந்து – 75.0
இந்தியா – 59.52
ஆஸ்திரேலியா – 55.0
பங்களாதேஷ் – 50.0
பாகிஸ்தான் – 36.66
மேற்கிந்திய தீவுகள் – 33.33
தென்னாப்பிரிக்கா – 25.0
இங்கிலாந்து – 21.88
இலங்கை – 0.0