நாங்க ஆஸி. வந்தா என்னல்லாம் பண்ணி இருக்கீங்க மறந்துடிச்சா? சச்சின் கடும் தாக்கு

0
243

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நாக்பூர் ஆடுகளம் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஆடுகளத்தை  தயாரித்த பிறகு பின்  பராமரிப்பாளர்கள் ஆடுகளத்தில் சில பகுதிகளில் மட்டும் சுழற்பந்து வீச்சு எடுபடும் வகையில் மாற்றி அமைத்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் ஆறு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

அவர்கள் பந்து எதிர்கொள்ளும் இடத்தில் மட்டும் ஆடுகளம் கடினமாக மாற்றப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கூறுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் வீரராக நீங்கள் இருக்கும் போது அனைத்து மைதானங்களிலும் விளையாடும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நாங்கள் ஆஸ்திரேலியா வரும்பொழுது எல்லாம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் தான் அமைக்கப்படும் விர சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக எந்த ஆடுகளமும் செயல்படாது.

பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என்று தெரிந்துதான் நாங்கள் ஆஸ்திரேலியா வந்து விளையாடுகிறோம். இதேபோன்று உங்களுக்கும் இந்திய ஆடுகளங்களில் பந்து எப்படி செயல்படும் என்று தெரியும். இந்திய ஆடுகளங்களின் இயல்பு சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக எண்ணுகிறேன். அதேபோன்று நீங்களும் இந்த தொடருக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வந்திருக்கிறீர்கள். சிட்னியில் சுழற் பந்துவீச்சு சாதகமான மைதானத்தை அமைத்து விளையாடி கொண்டீர்கள் என்று கேள்விப்பட்டேன்.

இந்திய தொடருக்காக சிறப்பாக தயாராகி வந்த நிலையில் தற்போது ஆடுகளம் அமைக்கப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்புவது கொஞ்சம் கூட சரியல்ல. என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சம்பந்தம் இல்லாதவர்கள் தான் இது போன்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியா வீரர்கள் சுழற்பந்து வீச்சு  சவாலுக்கு தயாராகி விட்டார்கள் என்று எண்ணுகிறேன் என்று சச்சின் கூறியுள்ளார்.

- Advertisement -