“சச்சின் சொன்னாரு.. உலக கோப்பைல இந்த இந்திய பேட்ஸ்மேன் வெறித்தனம் பண்ண போறாரு” – யுவராஜ் சிங் ஆச்சரிய தகவல்!

0
967
Yuvraj

உலக கிரிக்கெட்டில் பெரிய அணிகளுக்கு எதிராக பெரிய தொடர்களில் சில வீரர்கள் மட்டும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிக உச்சமான நிலையில் தங்களது செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள்!

இந்திய கிரிக்கெட்டுக்கு இப்படி பெரிய அணிகளுடன் பெரிய போட்டிகளில் பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வீரராக இருந்தவர் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் இடதுகை பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர் யுவராஜ் சிங்!

- Advertisement -

2007 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை வென்ற பொழுது இங்கிலாந்துக்கு எதிராக ஆறு பந்துகளுக்கு ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசியது, அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 34 பந்தில் 70 ரன்கள் சேர்த்து இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றது, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 359 ரன்கள் மற்றும் 15 விக்கெட் வீழ்த்தி இருந்தது என, மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியா பெற்ற இரண்டு உலகக் கோப்பைகளிலும் முதன்மை இடத்தில் இருக்கும் பெயர் யுவராஜ் சிங்!

இவர் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விட்டு சென்ற நான்காவது இடம் இன்று வரையில் யாராலும் நிரப்பப்படாமல் அப்படியே இருக்கிறது. மேலும் இவர் பந்துவீச்சில் இந்திய அணிக்கு தேவைப்படும் பொழுது உண்டாக்கி தந்த வசதி இப்பொழுது வரை கிடைக்கவே இல்லை.

மேலும் யுவராஜ் சிங் களத்தில் நின்றால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இல்லாமல் ஃபீல்டிங்கிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வீரர். சிறப்பான கேட்ச் மற்றும் ரன் அவுட் மூலமாக ஆட்டத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கி அணிக்கு மிகப்பெரிய உதவிகளை செய்பவர்.

- Advertisement -

தற்பொழுது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குறித்தும், அந்தத் தொடரில் இந்திய அணியின் சார்பாக யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்தும் யுவராஜ் சிங் பேசியிருக்கிறார்.

இது குறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது “தற்பொழுது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறந்த ஃபார்மில் இல்லை என்று எனக்குப் புரிகிறது. கடந்த முறை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இல்லை. அப்போது நான் அவரிடம் ஏதோ ஸ்பெஷல் வரப்போகிறது எனவே நல்ல ஜோனில் இருங்கள் என்று கூறினேன். அந்த உலகக் கோப்பையில் அவர் ஐந்து சதங்கள் அடித்தார்.

மேலும் இப்பொழுது அவர் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இல்லை. இதனால் அவர் வருகின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பேட்டிங்கில் வெறித்தனமாக இருக்கப் போகிறார் என்று நினைக்கிறேன். இப்படி எல்லாம் ஒரு காரணத்தால் ஏதாவது நடக்கும். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. எனக்கும் இப்படித்தான் நடந்தது. என்னிடம் அப்பொழுது சச்சின் இதேதான் கூறினார்!” என்று கூறியிருக்கிறார்!