“முழுநேர கேப்டனா தோனி ஆனதுக்கு சச்சின் மட்டுமே காரணம் கிடையாது” – பரபரப்பான காரணத்தை வெளியிட்ட முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!

0
2102
Dhoni

2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் ஒரு வித்தியாசமான ஆண்டாக அமைந்தது. வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல கலவையான உணர்வுகளை வெளிப்படுத்திய ஆண்டாக அமைந்திருந்தது!

அந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்தத் தொடருக்கு ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறி வந்தது.

- Advertisement -

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்ல அவர்கள் ரசிகர்களின் வீடுகளைத் தாக்கும் அளவுக்கு இறங்க நிலைமை மிகவும் மோசமானது.

இதே வருடத்தில் ஐசிசி டி20 கிரிக்கெட் வடிவத்திற்கான முதல் உலகக் கோப்பை போட்டியை தென் ஆப்பிரிக்காவில் நடத்த, மூத்தவிரர்கள் விலகிக் கொண்டு இளம் வீரர்கள் இந்த உலகக் கோப்பைக்கு செல்லட்டும் என்று சச்சின் கூறி தோனியை கேப்டனாக பரிந்துரை செய்ய அப்படியே நடந்தது.

அந்தத் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்று வர, ஒரே வருடத்தில் மோசமான உலகக்கோப்பை தோல்வியும், உலகக்கோப்பையைக் கைப்பற்றிய வெற்றியும் வந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் முழு நேர கேப்டனாக மாற்றப்பட்டார். அவருக்கு அணியின் முக்கிய மற்றும் மூத்த வீரரான சச்சினின் ஆதரவு எல்லா வகையிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய வெங்சர்கர் பின் நாட்களில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் இருந்தார். அவர் மகேந்திர சிங் தோனி முழு கேப்டனாக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார்? என்று தற்பொழுது கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“அணியில் தேர்வு செய்யப்படுவதைத் தவிர, குறிப்பிட்ட வீரரின் கிரிக்கெட் அறிவு, உடல் மொழி முன்னணியில் இருந்து அணியை வழிநடத்தும் தலைமைப் பண்பு, மேன் மேனேஜ்மென்ட் திறன் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும்.

தோனியின் விளையாட்டு அணுகுமுறை, உடல் மொழி அவர் மற்றவர்களிடம் எப்படிப் பேசினார்? என்பதை நாங்கள் பார்த்தோம். எங்களுக்கு அவரைப் பற்றி நேர்மறையான கருத்து உருவானது. எனவே அதன் அடிப்படையில்தான் அவர் முழு நேர கேப்டனாக வந்தார்!” என்று தெரிவித்திருக்கிறார்!