ராகுலுக்கு இடம் கிடைக்காதுனு நினைச்சீங்களா? அடுத்த துணை கேப்டன் யார்? பிசிசிஐ வைத்த டிவிஸ்ட்

0
829

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காமல் தடுமாறி வருகிறார். கடந்த 10 இன்னிங்ஸில் ராகுல் அடித்த அதிகபட்ச ஸ்கோரே 21 ரன்கள் தான். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பை அடக்கும் வகையில் பி சி சி ஐ துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுலை நீக்கி உள்ளது.

- Advertisement -

இதற்கான காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ள கருத்தை தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி இரண்டு போட்டியில் துணை கேப்டன் யார் என்று அறிவிக்கப்படாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அனைவரும் தற்போது ரிஷப் பண்ட் எப்போது டெஸ்ட் அணிக்கு திரும்புவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த துணை கேப்டன் பதவிக்கு அவர்தான் சரியான நபராக திகழ்கிறார்.ரோகித் சர்மாவுக்கு கீழ் ரிஷப் பண்டை  நாம் பட்டை தீட்ட வேண்டும்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வழிநடத்தப் போவது யார் என்பதை நாம் தற்போது முடிவு செய்ய வேண்டும். என்னை நீங்கள் கேட்டால் தற்போது அடுத்த துணை கேப்டனுக்கு இரண்டு நபர்கள்தான் தகுதியாக இருக்கிறார்கள். ஒன்று ரிஷப் பண்ட்,  மற்றொன்று ரவீந்திர ஜடேஜா. ஆனால் ஜடேஜா விவகாரத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அவர் அடிக்கடி காயம் ஏற்படுவதால்  துணை கேப்டன் பதவிக்கு சரிவரமாட்டார். ஆனால் ரிஷப் பண்ட் எப்போதும் பிட் ஆக இருக்கக்கூடிய வீரர். எனினும் அவருக்கு ஏற்பட்ட கார் விபத்து துரதிஷ்டவசமானது. பி சி சி ஐ என்ன சொல்ல வேண்டுமோ அதை கேள் ராகுல் விவகாரத்தில் சொல்லிவிட்டது. நீங்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே உங்களுக்கு துணை கேப்டன் பதவி கிடைக்கும் என்பதுதான் இதற்கு பொருள்.

கே எல் ராகுல் முன்பு போல் விளையாடுவதில்லை. இந்திய அணியில் இடம் பெறுவதற்கு என்ன தகுதி வேண்டுமோ அது போல் ராகுல் செயல்படவில்லை. எனினும் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ராகுல் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று நீங்கள் நினைக்காதீர்கள். முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வென்றது கே எல் ராகுலுக்கு சாதகமான விஷயமாக அமைந்துவிட்டது. இதுவே இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருந்தால் கே எல் ராகுல் நிச்சயமாக அடுத்த டெஸ்ட் போட்டியில்  இருந்து நீக்க இந்திய அணி நிர்வாகம் தயக்கம் காட்டியிருக்காது என்று சபா கரீம் கூறியுள்ளார்.

- Advertisement -