எஸ்ஏ 20.. 7 ரன்னை தாண்டாத 7 பேர்.. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வி.. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அபாரம்

0
2184

தென்னாப்பிரிக்காவில் தற்போது சவுத் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 7வது போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டர்பன் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய டர்பன் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. மேத்யூ பிரிக் 13 ரன்களிலும் டீ காக் 2 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் களம் இறங்கிய ஸ்மட்ஸ் 6 ரன்களிலும், அதற்குப் பின்னர் களம் இறங்கிய மல்டர் 12 ரங்களிலும் கீமோ பால் 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் டர்பன் அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இதில் கிளாஸன் மட்டுமே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 பந்துகளில் 7 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். 64 ரன்கள் குவித்த நிலையில் வில்லியம்சின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பிறகு வந்த ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் சூப்பர் ஜெயின்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்தது.

சிறப்பாகப் பந்து வீசிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் வில்லியம்ஸ் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இம்ரான் தாஹிர், பர்கர், செப்பார்டு, மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் ஃபாப் டு பிளசிஸ் 17 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹென்றிக்ஸ் சிறப்பாக விளையாடி 38 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜோபார்க் அணியின் விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஹெர்மான் ஆறு ரன்னிலும், புலூய் ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

- Advertisement -

இதில் மொயின் அலி மட்டுமே சிறிது நிதானமாக விளையாடி 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, மூணு சிக்ஸர் உடன் 36 ரன்கள் குவித்தார். அவருக்குப் பின்னால் வந்த வீரர்கள் யாரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக ஜோபர்க் அணி வீரர்கள் ஏழு பேர் களம் இறங்கி ஏழு ரன்களைக் கூடத் தாண்டவில்லை. இறுதியில் ஜோபர்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 108 ரன்களையே குவித்தது. இதனால் சூப்பர் ஜெயின்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.