பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தென்னாப்பிரிக்கா எஸ் ஏ 20 லீக் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தொடரை நடத்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது தான் இந்த தொடர் உயிர்பெற்றுள்ளது.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கக் கூடிய காரணம் எஸ் ஏ டி 20 தொடரில் விளையாடக்கூடிய அனைத்து ஆணிகளையும் ஐபிஎல் அணிகள் நிர்வாகமே வாங்கி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஜோகனஸ்பர்க் அணியையும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டவுனையும், ராஜஸ்தான் அணி பார்லையும், சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டன் கேப்சையும், சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி டர்பனையும், டெல்லி கேப்பிடல் அணி பிரிட்டோரியாவையும் வாங்கியுள்ளது.
இந்தத் தொடர் குறித்து பேசிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டுப்ளசிஸ் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டை மறுமலர்ச்சிக்கு இந்த புதிய தொடர் வித்திடும் என்று கூறியுள்ளார். தற்போது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டுக்கு இருண்ட காலமாக இருந்தாலும் நிச்சயம் இந்த தொடர் மூலம் அனைத்தும் மாறும். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் எதிர்காலத்திற்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமையும். தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இந்த தொடர் நடைபெறும் என்று டுபிளசிஸ் கூறியுள்ளார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தில் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள டுபிளசிஸ், இளம் வீரர்களுக்கு இந்த தொடர் வரப் பிரசாதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். எம் ஐ கேப் டவுண் அணியை பொறுத்தவரை ரசித் கான், ராபாடா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் காயத்திலிருந்து ஒன்றரை ஆண்டுக்கு பிறகு திரும்பி உள்ள ஜோப்ரா ஆர்சர், எம் ஐ கேப் டவுன் அணிக்காக விளையாட உள்ளார்.
இந்த தொடரில் முதல் போட்டியில் எம் ஐ கேப் டவுண் அணியும், பார்க் ராயல் அணியும் மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. ஜோபர்க சூப்பர் கிங்ஸ் அணி வரும் 11ம் தேதி டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் உடன் பல பரிட்சை நடத்துகிறது.