தொடங்கிய SA 20.. ஐபிஎல் ஓனர்களின் 6டீம்.. எந்த சேனலில் பார்க்கலாம்?.. அணி வீரர்கள்.. அட்டவணை.. முழு விபரம்!

0
407
SA 20

தற்பொழுது பிரான்சிசைஸ் டி20 லீக்கில் உலகில் முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக் இருந்து வருகிறது.

இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகள் நடத்தும் பிரான்சிசைஸ் டி20 லீக்குகள் இருந்து வருகின்றன.

- Advertisement -

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் துவங்கப்பட்ட பிரான்சிசைஸ் டி20 லீக் ஐபிஎல் தொடருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை ரசிகர்களின் ஆதரவு மற்றும் வருமானத்தில் பிடித்திருக்கிறது.

ஐபிஎல் தொடருக்கும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கும் இடையில் வருமானரீதியாக மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலும் கூட, இதுவே இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் மொத்தம் ஆறு அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆறு அணிகளையுமே ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள இந்திய உரிமையாளர்களே வாங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கேசவ் மகாராஜ் கேப்டனாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாப் டு பிளிசிஸ் கேப்டன் ஆகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சன்ரைசர் ஈஸ்டன் கேப் அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டன் ஆகவும் இருக்கிறார்கள்.

மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு வெயின் பர்னல் கேப்டன் ஆகவும், மும்பை இந்தியன் அணியின் எம்ஐ கேப்டவுன் அணிக்கு கீரன் பொல்லார்ட் கேப்டனாகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பார்ல் பியர்ஸ் அணிக்கு டேவிட் மில்லர் கேப்டன் ஆகவும் இருக்கிறார்கள்.

இன்று தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஜோகினஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையே துவங்குகிறது. இரவு 9 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கின்றன. மேலும் பிப்ரவரி 10ஆம் தேதி உடன் இந்தத் தொடர் முடிவுக்கு வருகிறது.

இந்தியாவில் இந்த தொடரை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 1 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 1 ஹெச்டி சேனலிலும் பார்க்கலாம். மேலும் ஆன்லைனில் இலவசமாக ஜியோ சினிமா அப்ளிகேஷனில் பார்க்கலாம்.