ருதுராஜ் மாஸ் கம்பேக்.. தனியாளாக போராடி ரன் குவிப்பு.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

0
163
Ruturaj

தற்போது உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபி நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கு கொள்ளும் இந்தத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

நேற்று ரஞ்சி கிரிக்கெட்டில் துவங்கிய ஒரு போட்டியில் டெல்லியில் வைத்து மகாராஷ்டிரா மற்றும் சர்வீசஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டிதுவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் போது கையில் காயம் அடைந்த ருதுராஜ் மொத்தமாக அடுத்து வந்த டெஸ்ட் தொடரில் இருந்தும் வெளியேறினார். அதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டி20 தொடரிலும் தேர்வாகவில்லை.

இந்த நிலையில் மேலும் உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏற்கனவே டெஸ்ட் அணியில் இடம்பெற்று வந்த ருத்ராஜ் தேர்வு செய்யப்படாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கவலையாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று அவர் சர்வீசஸ் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராகக் களம் இறங்கி விளையாடி இருக்கிறார். மேலும் மொத்த அணியும் தடுமாறிய பொழுது தனி ஒரு வீரராக அணியை ஓரளவுக்கு நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

- Advertisement -

நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 79 ஓவர்களில் 225 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. ருதுராஜ் மட்டும் தனியாக நின்று போராடி 161 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 96 ரன்கள் எடுத்து, கம்பேக் போட்டியில் சதம் அடிக்க முடியாமல் வெளியேறினார்.

இதையும் படிங்க : “ரோகித் இனிமே கேப்டன்சி செய்ய கத்துக்குவார்னு நினைக்கிறேன்” – இங்கிலாந்து ஸ்டீவன் பின் விமர்சனம்

ஆனால் அவர் காயத்திலிருந்து குணமாகி வந்தது மட்டுமில்லாமல், பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நின்று ரன்களும் குவித்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது.