“ரோகித் இனிமே கேப்டன்சி செய்ய கத்துக்குவார்னு நினைக்கிறேன்” – இங்கிலாந்து ஸ்டீவன் பின் விமர்சனம்

0
111
Finn

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட், நேற்று மூன்றாவது டெஸ்டில் இரண்டாவது நாளின் கடைசி செசனில் அதிரடியாக விளையாடி தனது சதத்தை நிறைவு செய்தார்.

நேற்று இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. எப்படியும் இங்கிலாந்து அணியை இந்த ரண்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்பது நம்பிக்கையாக இருந்தது.

- Advertisement -

ஆனால் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் விளையாடிய விதத்தில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் மட்டும் இழந்து சிறிது நேரத்தில் 27 ரன்கள் குவித்து போட்டிக்குள் வந்துவிட்டது.

இவரது அதிரடியின் காரணமாக இங்கிலாந்து அணி நாளை மேற்கொண்டு 50 ஓவர்கள் பேட்டிங் செய்தால் இந்த டெஸ்ட் போட்டியில் தோற்கும் வாய்ப்பை குறைத்து விடும் என்பது முக்கியமானது.

நேற்றைய நாளில் இந்திய அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பந்துவீச்சுக்கு தாமதமாகவே வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் பென் டக்கெட் அரை சதத்தை தாண்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் “60, 70 ரன்கள் தாண்டிவிட்ட டக்கெட் வித்தியாசமான பேட்ஸ்மேன். அவரைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினமான விஷயம்” என்பதாக பேசியிருப்பார். மறைமுகமாக தன்னை முன்கூட்டியே பந்து வீச்சுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என அஸ்வின் கூறியதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்டீவன் பின் ரோகித் சர்மா கேப்டன்சி குறித்து கூறும் பொழுது ” ரோகித் சர்மா தன்னுடைய பந்துவீச்சாளர்களை எப்பொழுது கொண்டு வர வேண்டும் யாருக்கு எதிராக கொண்டுவர வேண்டும் என இனிமேல் ஆய்வு செய்து சரி செய்து கொள்வார் என நினைக்கிறேன்.

இதையும் படிங்க : “500 விக்கெட் எடுத்த அஸ்வினுக்கே புரியல.. லஞ்ச் டைமுக்கே உங்க ஸ்கோர் பத்தாது” – அலைஸ்டர் குக் பேச்சு

நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் முன்கூட்டியே கொண்டுவராததின் காரணமாக, ரோகித் சர்மா போட்டியில் ஒரு பெரிய தந்திரத்தை இழந்துவிட்டார்” என்று விமர்சித்துக் கூறி இருக்கிறார்.