17 பந்துக்கு 17 ரன் எடுத்தேன்.. கோலி இல்லனா இந்த செஞ்சுரி அடிச்சிருக்கவே முடியாது – வில் ஜேக்ஸ் பேச்சு

0
2818
Jacks

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில், முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வில் ஜேக்ஸ் அதிரடியில் பெங்களூரு அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பின் விராட் கோலி வில் ஜேக்ஸ் இன்னிங்ஸ் பற்றி பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் தோற்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணிக்கு சகா 5(4), கேப்டன் கில் 16(19) ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் 84(49) மற்றும் ஷாருக் கான் 58(30) ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடி 45 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் வில் ஜேக்ஸ் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் போட்டியை முடித்து விட்டார்கள். வில் ஜேக்ஸ் 41 பந்தில் 100 ரன்கள் குவித்தார். விராட் கோலி 44 பந்தில் 70 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி கூறும் பொழுது ” வில் ஜேக்ஸ் ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய வந்த பொழுது அவர் எதிர்பார்த்தபடி விளையாட முடியாததால் எரிச்சல் அடைந்தார். நான் அவருக்கு பொறுமையாக இருக்கும்படி சொல்ல வேண்டி இருந்தது. அவர் அமைதியாக இருந்து விளையாடி முடித்தால் எப்படி வெடிப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். மோகித்தின் ஓவர் ஆட்டத்தை மாற்றி அமைத்தது. ஜேக்ஸ் விளையாடுவதை சுற்றி நின்று நான் பார்த்து ரசித்தேன்.

மேலும் நாங்கள் 19 ஓவர்களில் வெற்றி பெறுவோம் என்று கணக்கு வைத்திருந்தேன். ஆனால் அவர் முன்கூட்டியே பதினாறு ஓவர்களில் முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் முதல் இன்னிங்ஸ் விளையாடும் பொழுது பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இதன் காரணமாக அடுத்த நாங்கள் விளையாடும் பொழுது பேட்டிங் செய்ய இன்னும் சிறப்பாக மாறியது.

- Advertisement -

இதையும் படிங்க : ஜேக்ஸ் வருத்தத்துல இருந்தாரு.. அவர்கிட்ட ஒரு விஷயம்தான் பேசினேன்.. 16 ஓவர்ல முடிச்சிட்டாரு – விராட் கோலி பேட்டி

15 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இந்த வேலையை செய்வதற்கு காரணம், வேலையை செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். நாங்கள் எங்கள் சுயமரியாதைக்காகவும், எங்களை ஆதரிக்கும் எங்கள் ரசிகர்களுக்காகவும் விளையாட விரும்புகிறோம். இதுவரை சிறப்பாக விளையாடியதற்காக விளையாடவில்லை. மேலும் மக்கள் நம் ஆட்டம் குறிப்பாக ஸ்ட்ரைக் ரேட் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நம் விளையாட்டு நமக்குத்தான் தெரியும். இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்றும் தெரியும். தொடர்ந்து சிறப்பாக செய்ய முயற்சி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.