டி20 கிரிக்கெட்டில் சிஎஸ்கே உலக சாதனை.. 2024 ஐபிஎல்-ல் கேப்டனாக ருதுராஜ் மாஸ் ரெக்கார்டு

0
2678
CSK

நடப்பு ஐபிஎல் தொடரின் 46 ஆவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. சிஎஸ்கே அணிக்கு மீண்டும் துவக்க ஆட்டக்காரராக வந்த ரகானே 12 பந்துகளில் ஒன்பது ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்து மீண்டும் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கேப்டன் ஒரு ருது ராஜ் உடன் டேரில் மிட்சல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய பின்பு கொஞ்சம் அதிரடி காட்டியது. இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் கடந்தார்கள். டேரில் மிச்சல் 32 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் உடன் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 64 பந்துகளில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இந்த நிலையில் ஒரு முனையில் கேப்டன் ருதுராஜ் மிகச்சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். இவருடன் சேர்ந்த சிவம் துபே ஆரம்பத்தில் தடுமாறி பின்பு வழக்கமான அதிரடியில் ஈடுபட்டார். கடைசியில் ருதுராஜ் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 34 பந்துகளில் 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கு அடுத்து உள்ளே வந்த தோனி நடராஜன் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். 2 பந்தில் தோனி 5 ரன்கள் எடுக்க, சிவம் துபே 20 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களுக்கு மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 17 பந்துக்கு 17 ரன் எடுத்தேன்.. கோலி இல்லனா இந்த செஞ்சுரி அடிச்சிருக்கவே முடியாது – வில் ஜேக்ஸ் பேச்சு

மேலும் 200 ரண்களுக்கு மேல் 35 முறை எடுத்து டி20 கிரிக்கெட்டில் சி எஸ் கே உலக சாதனை படைத்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் சோமர் செட் அணி 34 முறை எடுத்திருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டனாக 400 ரன்கள் கடந்த முதல் கேப்டனாக ருதுராஜ் சாதனை படைத்திருக்கிறார்.