தோனி பாய் போன வருஷமே ஒன்னு சொன்னார்.. நான் எதையும் மாத்த மாட்டேன் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

0
243
Dhoni

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து இளம் வீரர் ருதுராஜுக்கு மாறி இருக்கிறது. இதை மாற்றிக் கொடுத்தவரும் மகேந்திர சிங் தோனியாகவே இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் எந்தவித அதிர்வுகளும் இல்லாமல் கேப்டன் பொறுப்பை இன்னொருவருக்கு மாற்றி கொடுத்து, அப்படி கொடுத்தவரின் கீழ் எந்தவித மரியாதை குறைவும் இல்லாமல் விளையாடி வெளியே வந்த ஒரே இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மட்டும்தான். தற்பொழுது அவருடைய அந்தப் பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடர்கிறது.

- Advertisement -

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி இப்படியான எந்த தவறான சச்சரவுகளுக்கும் இடமே இல்லாத வகையில், மிக முக்கிய விஷயங்களுக்கான முடிவுகளை தொலைநோக்காக எடுத்து சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் எல்லோருமே தங்களது கேப்டனுக்கு இது கடைசி சீசனாக இருக்கும், எனவே அவரை கேப்டனாக ஒரு முறை களத்தில் வந்து பார்க்க வேண்டும் என்று, முதல்முறையாக கிரிக்கெட் மைதானத்திற்கு வர நினைத்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். எனவே இந்த முடிவு அவர்களுக்கு சோகமாகவே அமைந்திருக்கிறது.

தோனி பாய் சொன்னது என்ன?

அதே சமயத்தில் ருதுராஜுக்கு திடீரென மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பை கொடுத்திருப்பாரா? இந்த அழுத்தம் மிக்க பொறுப்பை அந்த இளைஞரால் திறன் பட சமாளிக்க முடியுமா? தோனி இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்கின்ற பேச்சுகள் இருந்து வருகிறது.

- Advertisement -

தற்பொழுது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசி இருக்கும் ருதுராஜ் கூறும் பொழுது ” கடந்த ஆண்டு மஹிபாய் என்னிடம் கேப்டன் பொறுப்பு பற்றி சூசகமாக கூறினார். எதற்கும் தயாராக இருங்கள், நீங்கள் அடுத்த வருடம் அணி முகாமுக்கு வரும் பொழுது உங்களுக்கு எதுவும் ஆச்சர்யமாக இருக்கக் கூடாது என்று சொன்னார். நான் இந்த வருடம் அணி முகாமுக்கு வந்த பொழுது, அவருக்கு எனக்கு போட்டி சூழல்கள் பற்றியும் விளக்கினார். பிறகு கேப்டன் பொறுப்பு குறித்து தான் முடிவு செய்து விட்டதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே என்னிடம் சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க : தோனியை எனக்கு நல்லா தெரியும்.. ருதுராஜ் விஷயத்துல இதுதான் நடந்திருக்கும் – அஸ்வின் கருத்து

மஹி பாய் கேப்டன் பொறுப்புக்கு என்னை நம்பியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அணி உரிமையின் இயக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். சிஎஸ்கே அணியின் வெற்றிக்கான மந்திரம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அதில் ஒரு துளியைக் கூட நான் மாற்ற விரும்பவில்லை. என்னை மஹி பாய், ஜட்டு பாய் மற்றும் ரகானே பாய் ஆகியோர் இருப்பது பெரிய மகிழ்ச்சியான விஷயமாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.