தோனியை எனக்கு நல்லா தெரியும்.. ருதுராஜ் விஷயத்துல இதுதான் நடந்திருக்கும் – அஸ்வின் கருத்து

0
388
Ashwin

2024 ஆம் ஆண்டு 17 ஆவது ஐபிஎல் சீசன் இன்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே துவங்கும் முதல் போட்டியின் மூலம் துவங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடக்கின்ற காரணத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இன்றைய டாஸ் நிகழ்வுக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி வர மாட்டார். அவருடைய இடத்திற்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் 27 வயது ருதுராஜ் இன்று முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்த போகிறார். அவர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் சராசரியாக செயல்பட்டால் கூட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர்தான் குறைந்தது 6, 7 ஆண்டுகள் கேப்டனாக இருக்கப் போகிறார்.

- Advertisement -

இளம் வீரரான அவருக்கு திடீரென இவ்வளவு பெரிய அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அவரால் தாங்க முடியுமா? என்கின்ற கேள்விகள் வெளியில் இருந்து வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டன் என ருத்ராஜுக்கு ஓரளவுக்கு கேப்டன்சி அனுபவம் இருக்கவே செய்கிறது.

இந்த நிலையில் திடீரென ருதுராஜுக்கு கேப்டன்சி பொறுப்பு மகேந்திர சிங் தோனியால் வழங்கப்பட்டு இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக அவரால் உடனடியாக பெரிய தொடர் ஒன்றில் பெரிய அணிக்கு கேப்டன் பொறுப்பை தாங்கி வழிநடத்த முடியுமா என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

தோனியை எனக்கு நல்லா தெரியும்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “தோனியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் எப்பொழுதும் அணியின் நலனையே முன்னாள் வைத்திருப்பார். எப்போதும் அது குறித்தே யோசித்துக் கொண்டிருப்பார். இதனால்தான் கேப்டன் பொறுப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜடேஜாவிடம் கொடுத்தார். தற்பொழுது ருதுராஜிடம் கொடுத்திருக்கிறார். இது நடக்கும் ஆனால் யாருக்கு எப்பொழுது என்றுதான் கேள்வியாக இருந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் நேற்று வரை தன்னை பேட்ஸ்மேன் ஆக மட்டுமே ருதுராஜ் நினைத்திருக்க மாட்டார். திடீரென அவருக்கு கேப்டன் பொறுப்பு போய் சேர்ந்து இருக்காது. கடந்த வருடமே ருத்ராஜ் முதல் கொண்டு இளைஞர்களுடன் இரவு உணவில் கலந்து கொண்டு, அடுத்த வருடம் நீ தான் கேப்டனாக இருக்கப் போகிறாய், நானும் இருக்கிறேன் பார்த்துக் கொள்ளலாம் என்று தோனி முன்கூட்டியே கூறியிருப்பார்.

இதையும் படிங்க : கில் எப்படி தெரியுமா?.. கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுருச்சு.. பையனுக்கு உதவ காத்திருக்கேன் – வில்லியம்சன் பேட்டி

எனக்கு ருதுராஜையும் தெரியும் அவர் மிகவும் இயல்பாகவும் அமைதியாகவும் இருக்கக் கூடியவர். மேலும் மிக முக்கியமாக அவர் நல்ல மனிதர். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பாராட்டி நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.