ஐயோ பதிரானாவா!பிரஸ் மீட்டில் அலறிய ருதுராஜ்.. நல்ல வேலை தப்பிச்சோம் என கருத்து

0
2239

சிஎஸ்கே அணியிடம் எப்போதுமே டெத் ஓவர்களை சிறப்பாக வீசக்கூடிய வீரர் இருந்ததில்லை. ஒரு காலத்தில் போலிங்கர், பிராவோ அந்த பணியை செய்து கொண்டிருந்தார்கள்.ஆனால் இவர்களெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இலங்கை வீரர் பதிரானா சி எஸ் கே அணியை காப்பாற்றி வருகிறார்.

குட்டி மலிங்கா என அழைக்கப்படும் பதிரானா, அவரைப் போலவே பந்து வீசி நெருக்கடியான கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்துகிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பதிரானா கடைசி கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதன் மூலம் மும்பை அணி ரன் குவிக்கும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால்  1390 ரன்களில் சுருண்ட மும்பை அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விட தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பதிரானா குறித்து ருதுராஜ் கெய்க்வாட்  பேசிய கருத்து சமூக வலைத்தளத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“பதிரானவை நான் வலைப் பயிற்சியின் போது_அவரின் 10 12 பந்துகளை தான் எதிர்கொண்டேன். அப்போது அவர் பந்தை இனி எதிர் கொள்ளவே கூடாது என நினைப்பேன். ஏனென்றால் அவருடைய பந்தை கணித்து விளையாடுவது மிகவும் கடினம். முதலில் வந்து அவர் எங்கே வீசுகிறார் என்று பார்த்து விளையாட வேண்டும்.

அதன் பிறகு அவர் எந்த லெங்தில் வீசுகிறார் என்பதையும் கணித்து விளையாட வேண்டும். இதனால் அவர் பந்துவீச்சில் விளையாடும் போது பேட்ஸ்மேன்கள் சில சமயம் லேட்டாக ஷாட்களை விளையாடுவார்கள். நல்ல வேலை பதிரானா எங்கள் அணியில் இருக்கிறார்.

- Advertisement -

இல்லையெனில் போட்டியிம்  அவரை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும் என கூறினார். இதுவரை சிஎஸ்கே அணிக்காக நடப்பு சீசனில் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள பதிரானா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் அவர் ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் வீதம் மட்டுமே கொடுத்திருக்கிறார்.

இதேபோன்று பதிரானாவை தோனி இலங்கை கிரிக்கெட்டின் சொத்து என பாராட்டி இருக்கிறார். பதிரானா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கூடாது என்றும் அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொண்டு ஐ சி சி தொடர்களில் மட்டும் அவரை இலங்கை கிரிக்கெட் அணி பயன்படுத்த வேண்டும் எனவும் பேசி இருக்கிறார்.