தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. ருதுராஜ்க்கு இங்கிலாந்திலிருந்து வந்த அழைப்பு.. சரியான முடிவு எடுத்த சிஎஸ்கே கேப்டன்

0
598

தோனி போன்ற ஒரு வீரர் இனி என்னுடைய இடத்திற்கு இவர்தான் வரவேண்டும் என்று சொன்னால் அவர் எவ்வளவு பெரிய திறமை வாய்ந்த வீரராக இருக்க வேண்டும். தோனி தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக விராட் கோலி வரவேண்டும் என்று கூறினார்.

இதனால் இந்திய கிரிக்கெட்டை விராட் கோலியின் வருகைக்கு பின் மாறியது,  அது போல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் இருக்க வேண்டும் என்றும் தோனி முடிவு எடுத்திருக்கிறார். ஆனால் அப்படி இருக்கும் ஒரு வீரர் இந்திய அணிக்காக வெறும் ஆறு சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 23 டி20 ஒருநாள் போட்டியில் தான் விளையாடி இருக்கின்றார்.

- Advertisement -

பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பு:

தன்னுடைய திறமையை விஜய் ஹசாரே கோப்பை ரஞ்சி கோப்பை ஐபிஎல் தொடர் என அனைத்து போட்டிகளிலும், ருதுராஜ் வெளிப்படுத்தி விட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு என்பது இந்தியாவில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் இந்திய சீனியர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த தருணத்தில் இந்திய ஏ அணியில் ருதுராஜ் இடம்பெற்றாலும், அவர் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிராக விளையாடவில்லை. இந்த சூழலில் வரும் ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்படும் இந்திய அணிக்குள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ருதுராஜ் பங்கேற்பார் என தெரிகிறது.

- Advertisement -

ருதுராஜ்க்கு கிடைத்த வாய்ப்பு:

இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதங்கள் தன்னுடைய நேரத்தை வீணடிக்காமல் ருதுராஜ் ஒரு சிறப்பான முடிவை எடுத்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள யாக்‌ஷியர் கவுண்டி அணி ருதுராஜை தமது கிளப்பில் வந்து விளையாட கேட்டிருக்கிறது. இதற்கு ருதுராஜ், ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.இதன் மூலம் இம்மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிடும்.

இதையும் படிங்க: ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு.. பல சிக்கல்களை சந்தித்தால் ஏற்பட்ட சோகம்.. முடிவுக்கு வந்த சகாப்தம்

அதன் பிறகு நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ருதுராஜ் யாக்‌ஷியர் அணிக்காக விளையாடப் போகிறார். இதனால் யாக்‌ஷியர் அணி நிர்வாகம் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அணியின் பயிற்சியாளர், ருதுராஜ் வருகை எங்கள் அணியின் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தும். சூழலுக்கு ஏற்ப ரன்களை வேகமாக அடிக்கும் திறமை வாய்ந்த வீரர். அது மட்டுமல்லாமல் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவர் விளையாடுவார். அவருடைய வருகை எங்கள் அணியின் போக்கை மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -